தீபாவளி பரிசாக 6 லட்சம் மதிப்புள்ள கார்! ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த நிறுவனம்
தன்னுடைய நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக ஹரியானாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கார் வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
தீபாவளி பரிசு
ஹரியானா மாநிலத்தில் மிட்ஸ்கார்ட் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் எம்.கே.பாட்டியா தன்னுடைய ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 6 லட்சம் மதிப்புள்ள டாடா பன்ச் காரை(Tata Punch Car) பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி வழங்கியுள்ளார்.
இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட நிலையில், நிறுவனத்தின் உரிமையாளர் தன்னுடைய ஊழியர்களுக்கு காரை பரிசாக வழங்கியுள்ளார்.
#WATCH | Panchkula, Haryana: A pharma company owner, M. K. Bhatia, gifts cars to his employees ahead of Diwali. pic.twitter.com/SVrDbAWlc1
— ANI (@ANI) November 4, 2023
கடந்த மாதமே பாட்டியா காரை பரிசாக வழங்கி விட்ட நிலையில், ஊழியர்களுக்கு கார் சாவியை வழங்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த பரிசு
இந்நிலையில் இது குறித்து பேசிய உரிமையாளர், தன்னுடைய ஊழியர்களின் அர்ப்பணிப்பும், கடினமான உழைப்பு என்னை ஆச்சரியத்தில் தள்ளி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே அவர்களுக்கு சிறப்பான பரிசை வழங்க வேண்டும் என தீர்மானித்தேன், அதனடிப்படையில் சிறப்பாக பணியாற்றிய 12 ஊழியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு காரை பரிசாக வழங்கினேன் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் விரைவில் மேலும் 50 ஊழியர்களுக்கு கார் வழங்க முடிவு செய்து இருப்பதாக புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.