childhood illnesses : குழந்தைகளை குறிவைக்கும் பொதுவான நோய்கள் என்னென்ன? சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும்
பொதுவாகவே பெரியவர்களுடன் ஒப்பிடுகைளில் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவது வழக்கம்.
குழந்தை பருவத்தில், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் வலுவாக இருக்காது இதன் காரணமாக குழந்தை மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படுகிறது.
அத்தகைய சூழ்நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க குழந்தைக்கு சீரான உணவை வழங்குவது மிகவும் முக்கியம்.
குழந்தை பருவத்திலிருந்தே அதிக மருந்து அல்லது சப்ளிமெண்ட்ஸ் உட்கொள்வது குழந்தையின் உடலை மிகவும் பலவீனப்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரைிக்கின்றனர்.
எனவே, இயற்கையான முறையில் குழந்தையை நோய்களிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
இந்த வகையில் குழந்தைகளை அதிமாக பாதிக்கும் மிக முக்கியமான குழந்தைப்பருவ நோய்கள் தொடர்பிலும் அதற்கான சிகிச்சை முறைகள் தொடர்பிலும் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜலதோஷம்
ஜலதோஷம் குழந்தைகளை பாதிக்கும் முக்கிய நோயாக பார்க்கப்படுகின்றது. இது மேல் சுவாசக் குழாயில் ஏற்படும் வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகின்றது.
மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல், இருமல், தும்மல் மற்றும் தொண்டை புண் போன்ற அறிகுறிகளை ஜலதோஷம் ஏற்படுத்தும்.
ஏழு முதல் பத்து நாட்கள் வரையில் நீடிக்கும் இந் நோய் நிலைமை பொதுவாக தானாக தோன்றி தமானாகவே சரியாகிவிடும் தன்மை கொண்டது.
ஆனால் வேறு பல ஆபத்தான வைரஸ் தொற்றுகளுக்கும் இதன் அறிகுறிகள் இருக்க்கும் என்பதால் குழந்தைகளிடம் இருக்கும் இந்த அறிகுறிகள் குறித்து அலட்சியமாக இருக்க கூடாது.
குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்பட்டால் போதியளவு ஓய்வு கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியதுவம் பெறுகின்றது. அதுவே ஜலதோஷத்துக்கு சிகிச்சையாகவும் இருக்கின்றது.
தொண்டை புண் ஏற்பட்டால் சூடான திரவங்களை பருக கொடுப்பது இதமான உணர்வை கொடுக்கும். மருத்துவரால் பரிந்துரைக்கப்படாவிட்டால், எந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் அல்லது அதிகப்படியான குளிர் மருந்துகளையும் கொடுப்பது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டவத்தை பலவீனமாக மாற்றிவிடும்.
காய்ச்சல்
உடல் வெப்பநிலை 100.4°F (38°C) மற்றும் அதற்கும் அதிகமான வெப்பநிலை காய்ச்சலாகக் கருதப்படுகிறது. அதாவது நோய் கிருமிகளை எதிர்த்து உடல் வினை புரிவதன் விளைவே காய்ச்சல் ஆகும்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் இருக்கும்போது, உடல் கூமாகவும் சுறுசுறுப்பாக இயங்க முடியாத நிலையிலும் இருக்கும். அதுமட்டுமன்றி பசியின் சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படும்.
குழந்தை பருவத்டதில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோய் நிலையாக இது காணப்படுகின்றது. போதுமான ஓய்வு, ஏராளமான திரவ ஆகாரங்களை கொடுப்பது சிறந்த சிகிச்சையளிக்கும்.
அசெட்டமினோஃபென் அல்லது இப்யூபுரூஃபன் போன்ற மருந்துகள் காய்ச்சலைக் குறைக்க துணைப்புரியும். காய்சல் 3 நாட்களுக்கு மேல் தொடர்நடதால் நிச்சயம் மருத்துவ ஆலாசனை பெற வேண்டியது அவசியம்.
காது வலி
குழந்தை பருவத்தில் காது வலி என்பது நோய்த்தொற்றுகள் (ஓடிடிஸ் மீடியா), ஜலதோஷம் அல்லது சைனஸ் தொற்று அல்லது காதுக்கு பரவும் பற்களில் வலி போன்ற காரணங்களின் விளைவாக ஏற்படுகின்றது.
காது நோய்த்தொற்று பெரும்பாலும் காது வலி, காய்ச்சல் போன்ற பிரச்சினைகளுடன் காது கேளாமை பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு காது வலி ஏற்பட்டால் ஒருபொதும் அதனை அழற்சியப்படுத்த கூடாது.
இது ஒரு பாக்டீரியா தொற்று என்றால் உங்கள் குழந்தை மருத்துவரின் ஆலாசனையை பின்பற்ற வேண்டியது அவசியம்.
வயிற்று வலி
குழந்தைகள் சரியாக உணவுகளை எடுத்துக்கொள்ள வில்லை என்றால், வயிற்று வலி அஜீரணம், உணவு விஷம் அல்லது ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அதனால் வயிற்று வலியுடன் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது வாந்தி போன்ற ஆரோக்கிய பிரச்சினைகள் தோன்றும்.
இந்நிலையில் நீரிழப்பைத் தடுப்பதற்கு திரவ ஆகாரங்களை அதிகரிக்க வேண்டும் ஓய்வு மற்றும் மென்மையான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
ஒவ்வாமை
குழந்தைகளை தாக்கும் மற்றுமொரு முக்கிய ஆரோக்கிய பிரச்சினை என்னவென்றால், ஒவ்வாமை காரணமாக ஏற்படும் உடல் நல பிரச்சினைகளாகும்.
குழந்தைகள் ஆசைப்படுகின்றார்கள் என்பதற்காக ஆரோக்கியம் அற்ற உணவுகளையும் பானங்களையும் வாங்கி கொடுப்பதால் அடிக்கடி ஒவ்வாமை பிரச்சினைக்கு உள்ளாகின்றார்கள்.
பல்வேறு ஒட்டுண்ணிகள், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் பல்வேறு நோய்கள் வந்தாலும், பல பொதுவான குழந்தை நோய்கள் ஒரே மாதிரியான வழிகளில் பரவும் போக்கையே கொண்டுள்ளது.
இதனால் குழந்தை பருவ நோய்களில் இருந்து பாதுகாப்பு பெற குழந்தைகளுக்கு ஊட்டத்சத்து மிக்க உணவு முறையை வழக்கப்படுத்த வேண்டும்.
குழந்தைகளை அதிகப்படியான வெயில் நேரத்தில் வெளியே விட வேண்டாம். குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே அனுப்புவதை திவிர்க்க வேண்டும். அதிக மழை அல்லது வெல்லம் வந்து ஓய்த பின்னர் சில தினங்களுக்கு குழந்தைகளை வெளியில் விளையாட விட கூடாது.
மற்ற நேரங்களில் வெளியில் செல்லும் போது தண்ணீர் பாட்டிலோடு அனுப்புங்கள். ஆடைகள் இறுக்கமில்லாமல் தளர்வாக வியர்வை உறிஞ்சும் பருத்தி ஆடைகளாக இருக்கட்டும். வீட்டிலும் அவ்வபோது தண்ணீர் குடிக்க வலியுறுத்த வேண்டும்.

leptospirosis symptoms: மனித குலத்துக்கு எமனாகும் பாக்டீரியா! லெப்டோஸ்பைரோசிஸ் அறிகுறிகள் எப்படியிருக்கும்?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |