முடி கொட்டுது மருந்து இருக்கா? டாக்டர் பட காமெடி நடிகருக்கு இப்படி ஒரு அழகான மனைவியா?
தமிழ் சினிமாவில் எப்பொழுதுமே வித்தியாசமான காமெடி நடிகர்களை ஆதரிப்பார்கள். அவர்களின் நகைச்சுவை பிடித்துப்போய்விட்டால் பலரும் கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள்.
அந்த வகையில், கொண்டாடப்படும் ஒரு காமெடி நடிகர் தான் சிவா அரவிந்த். இவர் ஒரு இயக்குனர் என்பது பலருக்கு தெரியாத ஒரு தகவல்.
கடந்த 2017ம் ஆண்டில் வெளியான நட்புன்னா என்னன்னு தெரியுமா படத்தின் இயக்குனரும் இவர் தான்.
அழகிய மனைவி மகள்
அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், டாக்டர் படத்தில் காமெடி நடிகனாக பெரிய வரவேற்பை பெற்றார்.
அதிலும் அவர் செய்யும் காமெடியான முடி கொட்டுது மருந்து இருக்க என்ற வசனம் மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனது.
அதன் பின்னர் தளபதி விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில், சிவா அரவிந்த்திற்கு திருமணமாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர் என வைரலாகும் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது..
இதனைக்கண்ட ரசிகர்கள் அப்படி இருந்தவரா இப்படி என ஆச்சரியப்பட்டு ஷேர் செய்து வருகின்றனர்.