நகைச்சுவை நடிகரின் அதிர்ச்சி மரணம் - நடந்தது என்ன? சோகத்தில் திரையுலகம்
தமிழ் சினிமாவில் வெங்காயம், ஐம்புலன் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ள லிட்டில் ஜான் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள, அல்லி நாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் தனசேகரன். இவரை செல்லமாக லிட்டில் ஜான் என அழைக்கப்படும் இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
3 அடி மட்டுமே உயரம் கொண்ட இவர் வெங்காயம், ஐம்புலன் உள்பட பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தாலும், கிராமங்கள் தோறும் கோவில் திருவிழாக்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

மாரடைப்பால் மரணம்
இந்நிலையில், மோடமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வீட்டில் உறங்கியவர் மீண்டும் காலையில் எழுந்திருக்கவில்லை.
அப்போது மூக்கிலும், வாயிலும் ரத்தம் வந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்த போது, அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, லிட்டில் ஜானின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான அல்லிநாயக்கன் பாளையத்தில் நடைப்பெற்றது.