நடிகர் சதீஷின் தந்தை காலமானார்... சோகத்தில் திரையுலகம்
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சதீஷ். தனது இயல்பான நடிப்பு, துல்லியமான டைமிங் காமெடி மற்றும் தனித்துவமான வசன உச்சரிப்பின் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், தற்போது நகைச்சுவை கதாபாத்திரங்களைத் தாண்டி கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.

சதீஷின் தந்தை காலமானார்
இந்த நிலையில், நடிகர் சதீஷின் தந்தை காலமானார் என்ற சோகச் செய்தி வெளியாகியுள்ளது. அவரது மறைவு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, சதீஷின் தந்தையின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அறிந்த உறவினர்கள், நண்பர்கள், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |