நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் - கவலையில் திரையுலகம்
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சற்று முன் பரிதாபமாக உயிர்துறந்தார்.
ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர் அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார் என தகவல் வெளியாகி உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு காட்ஸ் ஜில்லா படப்பிடிப்புதளத்தில் ரத்த வாந்தி எடுத்த ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் இவருக்கு சிறுநீரக பாதிப்பு, உணவுக்குழாய் பாதிப்பு என தெரிய வந்ததும் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் எவ்வளவு முயற்ச்சி செய்தும் இன்று சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் உயிர் பிரிந்தது.
தற்போது அவருக்கு வயது 46 ஆகும். ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர் மதுரை சேர்ந்த சங்கர் மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிட்டு டான்ஸ் ஆடுவதில் பிரபலம் ஆனார்.
அதனால் ரோபோ சங்கர் என அழைக்கப்பட்டார். பின்னர் விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலம் ஆனார்.
சினிமாவில் மாரி, இதற்குதானே ஆசைப்பட்டாய், புலி, வாயை மூடி பேசவும் படங்களால் பிரபலம் ஆனார்.
இவரின் இழப்பு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோபோ சங்கர் உடல் சென்னை வளசரவாக்கம் வீட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. நாளை இறுதி சடங்குகள் நடக்க இருக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |