48 வயதில் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ரம்பா... உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
நடிகை ரம்பா சினிமாவில் மீண்டும் எண்ட்ரி கொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் 1996ம் ஆண்டு தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக இருந்து வந்தார். முன்னணி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து, உச்சத்தில் இருந்தார்.
இவர் கடந்த 2010ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகியதுடன், நடிப்பதையும் நிறுத்தியிருந்த நிலையில், தற்போது ரம்பா மீண்டும் சினிமாவிற்குள் வரப் போகின்றார்.
ஏற்கனவே நடிகர் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தினால் ரசிகர்களுக்கு சிறிது சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் விஜய் இவர்களின் குடும்பத்தினருடன் இருந்ததுடன், புகைப்படமும் எடுத்திருந்தார்.
ரம்பா கூறியது என்ன?
சினிமாவில் மீண்டும் நடிப்பது குறித்து ரம்பா கூறுகையில், தனது முதல் சாய்ஸ் எப்போதும் சினிமா தான். இப்பொழுது எந்த சவாலான கதாபாத்திரமாக இருந்தாலும் செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
புதிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் ஆடியன்ஸை கவரும் திரைப்படங்களுடன் ரீஎன்ட்ரி கொடுக்க நான் ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
இவரது ரீஎன்ட்ரிக்காக ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், ரம்பாவின் ரீ எண்ட்ரி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |