வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் Combiflam மாத்திரைகள்
காய்ச்சல், அதீத வலி, தொற்றுகளை குறைக்க பயன்படுத்தப்படுகிறது Combiflam.
Ibuprofen மற்றும் Paracetamol என இரண்டு வலி நிவாரணிகளை உள்ளடக்கியுள்ளது Combiflam.
தலைவலி, தசை வலி, மாதவிடாய் வலி, பல் வலி, மூட்டு வலியை குறைக்கவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
உணவுடன் சேர்த்து எடுத்துக்கொள்வது அவசியம், ஏனெனில் பக்கவிளைவுகள் தீவிரமாகலாம்.
மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான அளவுகளில் எடுத்துக்கொள்ளவும், வலியின் தொடக்கத்திலேயே எடுத்துக்கொண்டால் சிறந்த பலனை பெறலாம்.
மூன்று நாட்கள் பயன்படுத்திய பின்னர் வலி குறையாமல் இருந்தாலோ, வேறு ஏதேனும் தொந்தரவுகள் இருந்தாலோ உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
பக்கவிளைவுகள்
நெஞ்செரிச்சல்
செரிமானமின்மை
வாந்தி
வயிற்று வலி
குமட்டல்
இது பொதுவான பக்கவிளைவுகளே, தீவிரமானதாக இருந்தாலோ, வேறு தொந்தரவுகள் இருந்தாலோ மருத்துவரை அணுகவும்.
Combiflam மாத்திரைகள் பெரும்பாலனவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டாலும், அனைவருக்கும் ஒத்துப்போகும் என கூற இயலாது.
ஆல்கஹால் அருந்தும் நபராக இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
கல்லீரல், சிறுநீரக நோயாளியாகவோ, ஆஸ்துமா தொந்தரவுகள் இருந்தாலும் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
கர்ப்பிணி பெண்களும், தாய்ப்பாலூட்டும் நபர்களும் மருத்துவரிடம் கட்டாயம் கூறவும், இதுதவிர இன்னும் பிற நோய்களுக்காக தொடர்ச்சியாக மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நபர்களும் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
Combiflam மாத்திரைகள் பயன்படுத்தும் போது ஆல்கஹால் உட்கொள்வதை தவிர்த்து விடுங்கள்.