உங்கள் காதலை புரிந்துகொள்ள...கலரை தெரிந்து கொள்ளுங்கள்..
வண்ணங்கள் நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை.
அந்தவகையில் உங்கள் காதலனுக்கோ காதலிக்கோ பிடித்த நிறத்தை வைத்தே அவர்களின் குணாதிசயங்களும் காதல் உணர்வுகளும் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
image - Adobe
கறுப்பு
யாரிடமும் எதையும் மனம்விட்டுப் பேச விரும்ப மாட்டார்கள். காதலில் இருந்து கொஞ்சம் விலகி இருக்க முயற்சி செய்வார்கள். மன அழுத்தம் அதிகமாகக் காணப்படும். விரைவாக திருமணம் செய்யவேண்டும் என நினைப்பார்கள்.
இவர்களுக்கு பெரும்பாலும் காதல் கைகூடாமல் எட்டாக் கனியாகவே இருக்கும். கறுப்பு காதலுக்கு கரும்பல்ல இரும்பு.
image - Blob in2 english
நீலம்
இவர்கள் தாம்பத்தியத்தில் புதுமையை விரும்புவார்கள். இவர்களிடம் காதல் உணர்வு அதிகமாகவே இருக்கும். என்றாலும் தனக்கும் காதலுக்கும் சம்பந்தம் இல்லாததைப் போல் இருப்பார்கள். நீலம் காதலை விட கல்யாணத்துக்கு ஏற்றது.
image - Art studio life
சிவப்பு
வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பவர்களாக இருப்பார்கள். கற்பனையில் நினைப்பவற்றை எல்லாம் காதலில் நிறைவேற்ற துடிப்பார்கள். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். காதல் சார்ந்த விடயங்களில் இவர்களின் பிடிவாத குணம் இவர்களை சிக்கலில் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
image - vistacreate
பச்சை
பச்சை நிறத்தை விரும்புபவர்கள் அதிகமாக பேச மாட்டார்கள். இவர்களின் மனதில் என்ன இருக்கின்றது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். தங்கள் காதல் சார்ந்த உணர்வுகளையும் யாரிடமும் வெளிக்காட்ட மாட்டார்கள். காதலில் பச்சையை மொத்தமாக நம்பலாம்.