இயற்கை வனப்பை மொத்தமாக குவித்து வைத்திருக்கும் இலங்கை.. பயணிகளை கவர்வதற்கு இது தான் காரணமா?
பொதுவாக விடுமுறை செல்ல வேண்டும் என ஆசைப்பட்டால் இந்தியாவை விட இலங்கையில் அழகான இடங்கள் நிறைய இருக்கின்றன.
அத்துடன் பொருளாதார ரீதியாக தற்போது இலங்கை பின்தங்கி இருப்பதால் நம்முடைய பட்ஜெட்டில் இலங்கை சென்று வரலாம்.
இயற்கையுடன் கூடிய ஒரு அழகும் இந்த நாட்டில் தாராளமாக இருக்கின்றது.
இங்கு வருகை தரும் பயணிகள் அதிக நாட்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்து விட்டு தான் செல்கிறார்கள்.
அந்த வகையில் இலங்கையில் அப்படி என்னென்ன அழகான இடங்கள் இருக்கின்றது என தெரிந்து கொள்வோம்.
இலங்கையிலுள்ள சிறப்புக்கள்
1. சுதந்திர சதுக்கம்
கொழும்பிலுள்ள வரலாற்றுமிக்க இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு வருகை தரும் பயணிகள் இலங்கை வரலாற்றை இலகுவாக தெரிந்து கொள்ளலாம். ஏனெனின் கண்படும்படி அத்தனை அழகான சான்றுகள் இருக்கின்றன.
அத்துடன் இந்த இடம் கடந்த 1948 ஆம் ஆண்டு பிரித்தானியப் பேரரசில் இருந்து இலங்கை விடுதலை பெற்றதைக் கொண்டாடும் ஒரு கம்பீரமான கல் மாளிகையாக பார்க்கப்படுகின்றது.
இலங்கையிலுள்ள அரசு இலங்கைக்கு சுதந்திரம் வாங்கிய போது இது போன்ற பல சான்றுகளை வெளிநாட்டவர்கள் விட்டு சென்றுள்ளார்கள். அவர்களின் ஞாபகமாக இந்த நாட்டு அரசாங்கம் இதனை பாதுகாத்து வருகின்றது.
2. கங்காராமய ஆலயம்
இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதால் நாட்டை சூழ புத்தரின் சிலைகள் அவர்களுக்கான வழிபாடுத்தலங்களை காணலாம். சிங்கள மக்கள் தங்களின் இனத்தை பெறுக்குவதற்காக இது போன்ற சான்றுகளை பாதுகாத்து வருகின்றார்கள்.
அத்துடன் பௌத்த வழிபாடுகளுடன் கூடிய இடங்கள் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை தொடுவது மற்றும் சேதப்படுத்துவது சட்டப்படி குற்றம் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
3. சிவப்பு மசூதி
சிவப்பு மசூதி எனப்படும் இடம் இலங்கை- கொழும்பு புறக்கோட்டை பகுதியிலுள்ளது. இங்கு இஸ்மியர்கள் வழிபாடுகளை நடத்துவார்கள். அத்துடன் மக்கா போன்ற புனிதமான இடமாகவும் பார்க்கப்படுகின்றது.
இங்கு சென்று நாம் வேண்டிக் கொள்ளும் அனைத்து விடயங்களும் நடக்கும் என இலங்கை மக்கள் நம்புகிறார்கள்.
சந்தை பகுதியில் இந்த சிவப்பு மசூதி அமைந்திருப்பதால் இந்த இடத்தை சுற்றி எப்போதும் மக்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். இலங்கையை சுற்றி பார்க்க வரும் போது இது போன்ற இடங்களை கண்டுச் செல்லுங்கள்.
4. கொழும்பு தேசிய அருங்காட்சியகம்
இலங்கையில் இருக்கும் வரலாற்று சான்றுகளை இந்த இடம் பாதுகாத்து வருகின்றது. இலங்கை தொடர்பான ஆராய்ச்சிகள் செய்வதற்கு இந்த இடம் ஏற்றதாக இருக்கும்.
அத்துடன் இலங்கை வெளிநாட்டவர்களின் பிடியில் இருந்த போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றது.
உங்கள் வீடுகளில் சிறுவர்கள் அதிகமாக இருந்தால் இது போன்ற இடங்களுக்கு கண்டிப்பாக அழைத்து செல்லுங்கள். தமிழர்களின் கலாச்சாரத்தை போன்று இதுவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
5. ஸ்ரீ கைலேஸ்வரம் கோவில்
இலங்கை பௌத்த நாடாக இருந்தாலும் இங்கு நான்கு மதத்தவர்கள் வசிக்கிறார்கள். அதனை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பது தான் ஸ்ரீ கைலேஸ்வரம் கோவில்.
இங்கு அதிகமான இந்து மக்கள் இருப்பதால் இது போன்ற சிறப்புமிக்க சில கோயில்கள் இருக்கின்றன. அத்துடன் இந்த கோயில் மிக பழமையான கோயில் என அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகின்றார்கள்.
மேலும் இலங்கையில் இருக்கும் கோயில்கள் கண்டிப்பாக ஒரு இலங்கை தமிழர்களின் பங்களிப்பு இருக்கும். புலம்பெயர் தமிழர்கள் தங்களின் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக இது போன்ற நினைவுச்சின்னங்களை விட்டு சென்றுள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் |