மகிழ்ச்சியில் இலங்கையர்கள்…சாதனை படைத்த கொழும்பு தாமரை கோபுரம்!
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் கடந்த 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்த தமரை கோபுரம் கொழும்பில் உள்ள பெரே வாவிக்கு அருகில் அமைந்துள்ள 30,600 சதுர மீற்றர் உயரத்தில் கட்டபட்டுள்ளது.
இந்த நிர்மாணிப்பு பணிகள் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. தாமரை கோபுரத்தின் மொத்த மதிப்பீடு முதலில் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டாலும், 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தபோது அதற்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 113 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
ஆனால், இந்தக் கோபுரத்தை அமைப்பதற்காக சீனாவிடம் இருந்து பெற்ற கடனில் 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலுத்த வேண்டியுள்ளது இந்த கடன் தொகை 2024 ஆம் ஆண்டிற்கு முன் செலுத்தபட வெண்டும். தாமரை கோபுரத்தின் மொட்டு உள்ள பகுதி 7 தளங்களைக் கொண்டது.
தாமரை கோபுரத்தின் மொட்டு பகுதியின் கீழ் உள்ள அந்தப் பிரிவில், டிஜிட்டல் சினிமா, ஒரு மாநாட்டு அரங்கம், பல பிரபலமான வணிக வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான அலுவலகங்கள் அமைக்கபட்டுள்ளது.
மேலும் மொட்டு பகுதியில் முதல் மற்றும் இரண்டாவது தளங்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் 2 விழா மண்டபங்கள் நிறுவப்பட்டுள்ளன மற்றும் ஐந்தாவது தளம் சுழலும் உணவகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
7வது தளம் பார்வையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தாமரை கோபுரம் பல நிபந்தனைகளின் அடிப்படையில் மக்கள் பாவணைக்கு விடபட்டுட்டுள்ளது.
இதன்படி, உள்நாட்டு மக்களுக்கு 500 மற்றும் 2,000 ரூபாய் வரையில் நுழைவுச் சீட்டு வழங்கபடுகின்றது இதில் 500 ரூபாவுக்கு நுழைவுச் சீட்டு பெற்றால் கூட்டாக சென்று பார்வையிட முடியும்.
2000 ரூபாவுக்கு பெற்றால் தனியாக சென்று கோபுரத்தை பார்வையிட முடியும்.
இதேவேளை 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நுழைவுச் சீட்டு 200 ரூபாய் ஆகும். வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு 20 அமெரிக்க டொலர்கள் அறவிடப்பட்டுள்ளது.
வார நாட்களில் பிற்பகல் 02:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் மதியம் 12:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரையிலும் தாமரை கோபுரத்தை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கோபுரத்தில் பயன்படுத்தபடும் மின்தூக்கிகள் நொடிக்கு 7 மீட்டர் உயரத்தில் செல்லக்கூடியது. இது இலங்கையின் முதலாவது வேகமான மின்தூக்கியாக கருதப்படுகின்றது.