நடனமாடிய மாணவி சுருண்டு விழுந்து உயிரிழப்பு... கதறிய சக மாணவிகள்
கல்லூரி மாணவி ஒருவர் நிகழ்ச்சியின் போது நடனமாடிய மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கல்லூரி நிகழ்வில் நடனமாடிய மாணவி
தெலுங்கானா மாநிலத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பிரதீபதி சக மாணவர்களுடன் நடனமாடிய போது கீழே சுருண்டு விழுந்துள்ளார்.
அங்கிருந்த மருத்துவ கல்லூரி ஆசிரியர்கள் மாணவிக்கு முதலுதவி அழுத்தும், மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார்.
குறித்த மாணவி தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள நியலகொண்டபள்ளி அரசு ஆதர்ஷ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார்.
குண்டு அஞ்சையா மற்றும் சாரதாலா தம்பதியின் 16 வயது மகள் பிரதீப்தி சிங் என்பது தெரியவந்துள்ளது.
உடனே மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
விசாரணையில் மாணவியின் இருதயத்தில் ஏற்கனவே ஓட்டை இருந்துள்ளதும், பணம் இல்லாத காரணத்தினால் அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்டதும் தெரியவந்துள்ளது.
இதய நோய் நிபுணர் ஒருவர் கூறுகையில், இதய நோய் பிரச்சினை இருக்கும் குழந்தைகள் உடம்பை வருத்தி செய்யும் எந்தவொரு வேலைகளையும் பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது. இவை இதயத்தை செயலிழக்க வைத்துவிடும் என்றும் தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |