Healthy Food Reacipes:மழைக்காலத்தில் சளித்தொல்லையா?இந்த ஒரு சூப் போதும்
பொதுவாக மழைக்காலத்தில் சளி இருமல் தொற்று வருவத வழக்கம். இதில் பெரிதளவில் பாதிப்பு ஏதும் இல்லை. இதற்கு முக்கிய காரணதாக இருப்பது வைரஸ் கிருமி தொற்றுக்கள் தான். பெரும்பாலும் சளித்தொற்று 7 முதல் 10 நாட்கள் வரை இருக்கும்.
புகைப்பவர்களுக்கு இது கூடுதலான நாட்கள் இருக்கும்.இதை வைத்தியசாலை சென்று குணப்படத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இதற்கு நாம் வீட்டில் செய்யும் உணவுகளை வைத்தே குணப்படுத்தலாம்.
இந்த பதிவில் சளித்தொல்லை மற்றும் தழைக்காலத்தில் வரக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் எப்படி விரட்டலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தூதுவளை - ஒரு கைப்பிடி அளவு
- துளசி இலை - ஒரு கைப்பிடி அளவு
- ஓமவல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
- வெற்றிலை – 2
- சுக்கு – அரை இன்ச்
- மிளகு – ஒரு ஸ்பூன்
- திப்பிலி – 4
- பூண்டு – 4
- சின்ன வெங்காயம் – 4
- தக்காளி – 1
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
செய்முறை
முதலில் துளசி, ஓமவல்லி, தூதுவளை, வெற்றிலை, சுக்கு, மிளகு, திப்பிலி, பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள் என அனைத்தையும் நன்றாக மிக்ஸி ஜாரில் அல்லது அம்மியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதில் 4 முதல் 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி பின்னர் உப்பு வேண்டிய அளவு எடுத்து சேர்த்து கொதிக்க வைத்து சூப்பாக செய்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை காலை வெறும் வயிற்றில் அல்லது இரவில் உங்களுக்கு உகந்த நேரத்தில் குடிக்கலாம்.
இந்த அளவு 3 முதல் 4 பேருக்கு ஏற்றது. இது சுவையானதாகவும் இருக்கும். இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கும் கொடுக்கலாம். வீட்டில் உள்ள அனைவரும் இதை குடிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |