உடல் எடையைக் குறைக்கும் ஐஸ் கட்டி தெரபி... பலரும் அறியாத நன்மைகள்
ஐஸ் கட்டி தெரபியின் ஆரோக்கிய நன்மையினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஐஸ் கட்டி தெரபி
சமீப காலமாக இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும் ஒரு விஷயம் தான் இந்த ஐஸ் தெரபி. ஒரு பாத் டப்பில் முழுக்க ஐஸ் கட்டிகளை போட்டு அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும்.
இது நம் உடல் ஆரோக்கியத்திற்கும் மன நிலை ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. ஐஸ் தெரபி, கிரையோதெரபி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த பிரபலமான சிகிச்சை மூலம் வீக்கத்தைக் குறைக்கவும், வலியைப் போக்கவும், குணப்படுத்துவதை ஊக்குவிக்கவும் உடலுக்கு குளிர்ந்த வெப்பநிலையைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது.
நன்மைகள் என்ன?
கடுமையான உடல் உழைப்பிற்கு பின் ஏற்படும் தசை வலியை குறைக்க இது உதவும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை விரைவாக வழங்கும்.
உடலில் ஏற்படும் வீக்கம், வலி குறைந்து தசைகள் புத்துணர்ச்சி பெறும். கழிவுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.
தூங்குவதற்கு முன்பு 5-10 நிமிடங்கள் ஐஸ் கட்டி நீரில் குளிப்பது, ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும்.
நெதர்லாந்து ஆய்வுகளின்படி, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மன அழுத்தம், சோர்வை குறைத்து, மூளையின் செயல்பாட்டை உற்சாகமூட்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |