சிறந்த குளியலுக்கு குளிர்ந்த நீரா? சுடுநீரா?- மருத்துவத்துடன் கூடிய விளக்கம்!
பொதுவாக அன்றாடம் குளிப்பது என்பது மிக முக்கியமான விடயம்.
2024 சனிபகவானின் கோபத்துக்கு ஆளாக போகும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கானு பாருங்க
இது நம்முடைய ஆரோக்கியத்திற்கும் எம்மை சுற்றியுள்ளவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவியாக இருக்கும்.
அதாவது ஒரு நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதிலிருந்து நாளின் இறுதியில் நமது சோர்வை போக்கி நமக்கு புத்துணர்ச்சி அளிப்பது வரை அனைத்திற்கும் “குளியல்” என்பது முக்கியமானது.
இப்படி ஏகபட்ட விடயங்களில் நன்மை கொடுத்தாலும் குளிப்பதில் உள்ள சந்தேகம் என்னவென்றால் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா? அல்லது சூடான நீரில் குளிப்பது நல்லதா? என்பது தான்.
Image - Anthony Cain/Getty Images
அந்த வகையில் குளிப்பதற்கு எது உகந்த நீர் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
1. குளிர்ந்த நீரில் குளிப்பது
பொதுவாக காலையில் குளிர்ந்த நீரால் குளிப்பது புத்துணர்ச்சி ஏற்படுத்தும். மேலும் இதில் குளிப்பதால் தூக்க கலக்கத்தையும், சோம்பலையும் போக்கும். இப்படி குளிப்பதால் மனஅழுத்தம் குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் நோயெதிர்ப்பு மண்டலம், நுரையீரல் என்பன மேம்படும்.
ஆண்கள் காலையில் குளிர்ந்த நீரில் தினமும் குளித்து வந்தால் அவர்களின் ஆண்மையை அதிகரிக்க வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. அதாவது ஆண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கும்போது உங்கள் டெஸ்டோஸ்டிரோன் வெளிப்பாடு அதிகரிக்கிறது. இது உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிப்பதுடன், அவற்றின் தரத்தையும் அதிகரிக்கும்.
விளைவுகள்
1. சளி, காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
2. குளிர்ந்த நீரில் குளிப்பது நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக் கூடும்.
2. சூடான நீரில் குளிப்பது
சூடான நீரில் குளிப்பதால் உடலுள்ள அழுக்குகள் எளிதாக வெளியேறும். வெப்பநிலை உடலில் உள்ள கிருமிகளை அழிக்கவும் உதவியாக இருக்கும்.
ஒரு மனிதரின் தனிப்பட்ட சுகாதாரம் இவ்வாறு குளிப்பதால் மேம்படும். சூடான நீரிலிருந்து வரும் நீராவி உடலிலுள்ள சளி மற்றும் இருமல் நீங்க செய்யும்.
மேலும் இதில் குளிப்பதால் தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இன்சொமேனியாவை போக்க உதவுகிறது. மேலும் உடல் சோர்வு மற்றும் மனஅழுத்தத்தை நீக்க கூடியது.
சர்க்கரை வியாதியுள்ளவர்கள் மற்றும் தசைகளில் வலியுள்ளவர்கள் சூடான நீரில் குளித்தால் நோயின் தாக்கம் குறையும் என கூறப்படுகின்றது.
தீமைகள்
Image - Shutterstock
1. சருமத்தில் இருக்கும் ஈரப்பதம் மற்றும் கெரட்டின் செல்கள் பாதிப்புக்குள்ளாகும்.
2. எரிச்சல், வரட்சி ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
3. இரத்த அழுத்தத்தின் அளவு கணிசமாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |