சருமத்தில் அடர்த்தியான கருமையை நீக்க வேண்டுமா?
சருமத்தை என்னதான் அழகாக வைத்தாலும் உடலின் சில இடங்களில் அடர்த்தியாக கருமை நிறம் படிந்திருக்கும்.
இந்த கருமையால் பலரும் அசாதாரணமாக நடந்து கொள்வார்கள் தலைமைத்துவத்தை விரும்ப மாட்டார்கள்.
இது அவர்களின் தன்னம்பிக்கையை உடைக்க கூடியது. இதற்காக என்ன கெமிக்கல்களை பயன்படுத்தினாலும் அந்த கெமிக்கல்களின் பாவனை நிறுத்தப்படும் போது மறுபடியும் அதே பிரச்சனை வர வாய்ப்புள்ளது.
ஆனால் இயற்கையான பொருட்களை பயன்படுத்தும் போது இந்த பிரச்சனை வராது. இந்த அடர்த்தியான கருமையை போக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டு வைத்தியம்
நமது சருமம் மிகவும் பொலிவாக தெரிய வேண்டும் என்றால் முதலில் சருமத்தில் இறந்த கலங்களை இல்லாமல் செய்ய வேண்டும். இப்படி செய்யும் போது தான் நமது சருமம் பொலிவாக காணப்படும்.
இந்த கலங்களை இல்லாமல் செய்ய முதலில் சருமத்தில் ஸ்க்ரப்பிங் செய்ய வேண்டும்.
இதற்கு வீட்டில் இருக்கும் கோப்பியை நீங்கள் எடுத்து அதனுடன் நீங்கள் சக்கரை தேங்காய் எண்ணெய் எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
இந்த கவையை உங்களுக்கு கருமை உள்ள இடத்தில் பூசினால் இறந்த கலங்கள் அழிந்து சருமம் பொலிவு பெறும். இதன் பின்னர் இதை சுத்தமான துணி கொண்டு துடைத்து விட்டு ஃபேஸ் பெக் ஒன்றினை தயாரித்து போட வேண்டும்.
ஃபேஸ் பெக் தயாரிப்பதற்கு முதலில் கடலைமாவு அரிசி மா கோப்பி பவுடர் தயிர் எலுமிச்சைசாறு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கலக்கி முகத்தில் பூச வேண்டும்.
இதை தேய்க்க கூடாது ஒரு 20 நிமிடம் கழித்து சாதாரண நீரில் கழுவி விட வேண்டும். இப்படி செய்தால் உங்கள் சருமம் முன்னர் இருந்ததை விட மிகவும் பொலிவாக இருப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |