பொடுகை வேருடன் இல்லாமலாக்கும் ஹேர் பேக்! காபி பவுடர் மட்டும் இருந்தா போதுமா?
பொதுவாக தினமும் காலையில் எழுந்ததும் பெரும்பாலான மக்கள் டீ அல்லது காபி குடிப்பார்கள்.
இது பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து இன்றும் பழக்கத்தில் உள்ளது. குடிப்பதற்காக பயன்படுத்தும் காபியை வைத்து முகத்திலுள்ள இறந்த செல்கள் மற்றும் தலைமுடி பிரச்சினைகளுக்கு பேக்காகவும் பயன்படுத்தலாம்.
நறுமணமான காபியை குடித்துக்கொண்டும், அவற்றை உங்கள் தலைமுடியில் தடவியும் காபியின் நன்மைகளை நீங்கள் அறுவடை செய்யலாம்.
Image - healthline
அந்த வகையில் தலைமுடி பிரச்சினைகளுக்கு எப்படி காபித்தூள் உதவுகின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
பொடுகு பிரச்சினைக்கு காபி
பொடுகு பிரச்சினையுள்ளவர்கள் காபியை தூளை நன்றாக தண்ணீர் கலந்து வைத்து விட்டு குளிக்க செல்ல வேண்டும்.
நன்றாக ஷாம்போ போட்டு தலைமுடியை அலசிய பின்னர் கடைசியாக கலந்து வைத்திருக்கும் காபித்தண்ணீரால் தலைமுடியை அலச வேண்டும்.
இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்வதால் தலைமுடி ஆரோக்கியமாக இருப்பதுடன் பொடுகு பிரச்சினையும் சரியாகும்.
காபி ஹேர் மாஸ்க்
தேவையான பொருட்கள்
காபி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மேற் கொடுக்கப்பட்ட மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.
கரண்டி அல்லது கைகளை பயன்படுத்தி பேஸ் போல் கலந்து கொள்ளவும்.
இந்த ஹேர் பேக்கை தலையில் போட்டு 20-30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள்.
பின்னர் ஷாம்போ போட்டு நன்றாக தலைமுடியை அலச வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |