ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தலாமா? ஆபத்தை கண்டிப்பாக அறிந்துகொள்ளுங்கள்

natural weight skin cooking
By Jon Jan 26, 2021 12:35 PM GMT
Report

கிட்டத்தட்ட நம் அனைவரின் வீட்டிலும் இருக்கும் ஒரு பழக்கம் சமைக்க உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது. இது நல்லதா அல்லது கெட்டதா என்பது தெரியாமலே பலகாலமாக நாம் இதனை வழக்கமாக கொண்டிருக்கிறோம். இன்றும் நம்மில் இருக்கும் ஒரு கேள்வி ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிக்கலாமா என்பதுதான்? இதற்கான விடை என்னவெனில் உபயோகிக்க கூடாது என்பதுதான்.

ஏனெனில் இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மேலும் சிலமுறைகள் பயன்படுத்தலாம். ஆனால் அது எண்ணெய் மற்றும் சமைக்கப்படும் உணவை பொறுத்தது. இதனை பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

வறுக்கும்போது என்ன ஆகிறது? எந்த உணவாக இருந்தாலும் அதனை அதிகம் வறுக்கும்போது, அது உணவை சிதைவடைய செய்து அதில் உள்ள புரோட்டின்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சிதைக்கிறது, அதனால்தான் உணவு சிவந்து விடுகிறது. ஊட்டச்சத்துக்கள் சிதைவடைந்த இந்த எண்ணெயை மீண்டும் உபயோகிக்கும்போது அது பல ஆரோக்கிய பிரச்சினைகளை உருவாக்கலாம்.

இப்படி அதே எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது ஆர்தோகுளோரோசிஸ் என்னும் நோயை உண்டாக்குகிறது. இதனால் உடலில் கெட்ட கொழுப்புகளின் அளவு அதிகரிக்கிறது. எண்ணெயின் வகை மற்றும் வெப்பநிலை எண்ணெயின் மறுபயன்பாடு என்பது அதன் தன்மை மற்றும் அது சூடுபடுத்தப்படும் வெப்பநிலையை பொறுத்து அமைகிறது.

ஊட்டசத்து நிபுணர்களின் கருத்துப்படி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தலாம், ஆனால் ஆலிவ் எண்ணெய் , எள் எண்ணெய் போன்றவற்றை அதிக வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதை தவிர்க்கவும். உபயோகிக்கும் பாத்திரம் உங்களுக்கு தெரியுமா? வீட்டில் உபயோகப்படுத்தும் எண்ணெய் கடைகளில் உபயோகப்படுத்தும் எண்ணெயை விட விரைவில் கெட்டுவிடும்.

இதற்கு காரணம் கடைகளில் செய்யப்படும் வெப்ப ஏற்பாடுகள் மற்றும் உபயோகிக்கும் பாத்திரங்கள்தான். வீட்டில் வறுக்கும்போது உணவுத்துகள்கள் பாத்திரத்தின் அடியில் சென்று சென்றுவிடும், ஆனால் கடைகளில் செய்யப்பட்டுள்ள அமைப்புகளில் இவ்வாறு நடக்காது. இவ்வாறு எண்ணெயில் உணவு துகள்கள் அதனை விரைவில் அதன் மூலக்கூறுகளை சிதைக்கும்.

எண்ணெயை மீண்டும் உபயோகிக்கலாமா? கூடாதா? ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையின்படி உணவுத்துகள்களை வடிகட்டி கொண்டு நன்கு வடிகட்டிய பின்தான் அதனை உபயோகிக்க வேண்டும். அதேசமயம் அதனை அதிக வெப்பநிலையில் உபயோகித்திருக்க கூடாது என்பதையும் உறுதிசெய்துகொள்ளவும். உபயோகித்த எண்ணெயை நன்கு மூடிய பாத்திரத்தில் சேமிக்கவும்.

ஒருவேளை சேமிக்கப்பட்ட எண்ணெய் அடர் நிறத்திற்கோ, தடிமனாகவோ அல்லது வழவழப்பாகவோ மாறினால் அந்த எண்ணெயை மீண்டும் உபயோகப்படுத்தாதீர்கள். உணவு துகள்களுடன் திறந்து வைக்கப்பட்டிருந்த எண்ணெயை எக்காரணத்தை கொண்டும் மீண்டும் உபயோகிக்காதீர்கள்.

பாதிப்புகள் இந்த வழிமுறிகளை பின்பற்றாமல் உபயோகித்த எண்ணெயை மீண்டும் மீண்டும் உபயோகிப்பது பல ஆரோக்கிய கோளாறுகளை உண்டாக்கும். இந்த எண்ணெய்களில் வழக்கமான எண்ணெயை விட அதிகளவு கொழுப்பு இருக்கும். மேலும் இதில் உள்ள உணவுத்துகள்கள் எண்ணையை நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றிவிடும்.

இந்த எண்ணெயை உபயோகிக்கும்போது அது குடல் புற்றுநோய், உயர் கொழுப்பு அளவுகள் மற்றும் இதய கோளாறுகள் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US