எடையைக் குறைக்கும் கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சி... ஈஸியாக செய்வது எப்படி?
உடல் எடையைக் குறைக்கும் கருப்பு கவுனி கஞ்சி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பதற்கு பல்வேறு வழிகளில் பலரும் முயற்சித்து வரும் நிலையில், கருப்பு கவுனி அரிசி கஞ்சி உதவியாக இருக்கும்.
சிறுதானியங்கள், மாப்பிள்ளை சம்பா கஞ்சிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது. இந்நிலையில் கருப்பு கவுனி அரிசியும் உடல் எடையை குறைக்கின்றது.
இதனை தேங்காய் பாலுடன் சேர்த்து செய்வதால் சத்துக்கள் இன்னும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் தேங்காய் பால் சேர்த்து கருப்பு கவுனி கஞ்சி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
கருப்பு கவுனி அரிசி - 2 கப்
தண்ணீர் - 10 கப்
வறுத்த வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 15 பல் (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
கெட்டி தேங்காய் பால் - 1 கப்

செய்முறை
கருப்பு கவுனி அரிசியை தண்ணீரில் நன்றாக கழுவி, இரவு முழுவதும் நன்றாக ஊற வைக்க வேண்டும். காலையில் தண்ணீரை வடிகட்டி அதனை குக்கரில் சேர்த்து 10 கப் தண்ணீர் சேர்க்கவும்.
இதனுடன் வெந்தயத்தை லேசாக வறுத்து சேர்க்கவும். இதனுடன் 15 பல் பூண்டு சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து 12 விசில் விட்டு இறக்கவும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து அடித்து வைத்துள்ள தேங்காய் பால் சேர்த்து சிறிது கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான கருப்பு கவுனி தேங்காய் பால் கஞ்சி தயார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |