நார்சத்து நிறைந்த தேங்காய் பால் ரசம்!
நாம் வழக்கமாக மதிய உணவுகளில், ரசம் ஊற்றி சாதம் சாப்பிட்டு இருப்போம். நாம் உண்ணும் உணவுகள் ஜீரணம் ஆவதற்கு ரசம் பெரிதும் துணை புரியும்.
பருப்பு ரசம், தக்காளி ரசம், லெமன் ரசம் என்று ரசத்தில் பல வகைகல் உள்ளன. அந்த வகையில் நம் ஆரோக்கியத்திற்கு தேங்காய் பால் ரசம் ஏற்றது.
ரசத்தை தேங்காய் பாலில் செய்வதால் அதில் உள்ள கால்சியம் உடலை பராமரிக்கும். இரத்தக் அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைக்க உதவுகிறது.
தேங்காய் பால் ரசத்தில் இரும்பு சத்தும், நார் சத்தும் நிறைந்து உள்ளதால் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.மேலும் இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு தேங்காய் பால் அளவோடு சேர்த்து கொள்வது நல்லது.
தேவையான பொருள்
- மிளகு- ஒரு டீஸ்பூன்
- சீரகம் - ஒரு டீஸ்பூன்
- வெந்தயம்- ஒரு டீஸ்பூன்
- தேங்காய்ப்பால் - அரை லிட்டர்
- நெய் - ஒரு டீஸ்பூன்
- கடுகு- ஒரு டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் - டீஸ்பூன்
- இஞ்சி- 2 டீஸ்பூன் (துருவியது)
- தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
- வெல்லம் - 2 டீஸ்பூன்
- கொத்தமல்லித்தழை - சிறிதளவு
- கறிவேப்பிலை - சிறிதாவு
செய்முறை
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் அதில் மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு மிதமான தீயில் சிவக்க வறுக்க வேண்டும்.அது ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் இதில் கடுகு சீரகம், பெருங்காயம் போட்டு தாளிக்கவும். அதில் இஞ்சி, தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் அந்த கலவையில் தேங்காய்ப்பாலை ஊற்றி மிதமான தீயில் கலக்க வேண்டும்.
அது நுரை வந்து லேசாக கொதிக்க ஆரம்பித்ததும் அதில் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை தூவி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். சுவையான தேங்காய்பால் ரசம் தயார்.