இலங்கையளர்கள் விரும்பி உண்ணும் காரமான கட்ட சம்பல்! யாருக்குதான் இப்படி செய்தால் பிடிக்காது?
சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ளவும், சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும் இந்த கட்ட சம்பல்.
இலங்கையர்கள் அதிகம் இதனை விரும்பி உண்ணுகின்றனர்.
இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு
- வரமிளகாய் - நான்கு உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
- கடுகு உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
விரும்பினால் சுவைக்கு மாசி சேர்த்து கொள்ளலாம்... இலங்கையர்கள் பெரும்பாலும் கட்ட சம்பலுக்கு மாசி சேர்ப்பதுண்டு.
செய்முறை
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிக்ஸியில் வரமிளகாய் உப்பு போட்டு ஒரு சுற்று சுற்றி மசிந்ததும் அதோடு ருசிக்காக மாசி சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும் வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிக்ஸியில் உள்ள ஒன்றிரண்டாக அரைத்த தேங்காயை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி இறக்கவும். சூப்பரான கட்ட சம்பல் ரெடி.