பாம்பிற்கும் கீரிக்கும் அரங்கேறிய சண்டை! சமாளிக்க முடியாத பாம்பின் பரிதாப நிலை
பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படையே நடுங்கும். அதிலும் நாகப்பாம்பு என்பது மிகவும் ஆபத்தான, அதிக விஷம் கொண்ட பாம்பாக கருதப்படுகிறது.
இருப்பினும், சில மனிதர்கள் கூட பாம்பை பிடிக்கும் பணியில் இருக்கிறார்கள் என்பதும் உண்மை தான். அதே போல் பாம்பை அச்சமில்லாமல் தாக்கும் பல விலங்குகளும் உள்ளன.

சில விலங்குகள் பாம்புகளை தங்களுக்கு இரையாக ஆக்குகின்றன. அதில் முக்கியமான ஒன்று கீரி. கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளதால், பாம்பு கொத்தினால், கீரியின் உடலில் காயங்கள் தான் ஏற்படுமே தவிர, அது சாகாது என்று கூறுவார்கள்.
இங்கு பாம்பு மற்றும் கீரி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இரண்டும் சண்டை போட்டுக்கொண்டாலும், இறுதியில், பாம்பு தாக்குபிடிக்க முடியாமல் தாப்பி செல்வதையும் காணலாம். இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில், பகிரப்பட்டுள்ளது.