நபரின் ஆடைக்குள் நுழைய நினைத்த பாம்பு... பின்பு நடந்ததை நீங்களே பாருங்க
வயலின் வரப்பில் அமர்ந்து கொண்டிருந்த நபரை தெறிக்க விட்ட பாம்பின் காணொளி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது.
சமீப காலங்களாக அதிகமான காணொளிகள் மக்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் விலங்குகள், குழந்தைகளின் காணொளி தான் அதிகமாக வலம்வருகின்றது.
இங்கு நபர் ஒருவர் சாலை ஓரத்தில் இருக்கும் வயல் வரப்பில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருக்கையில் திடீரென ஒரு நாகப்பாம்பு அவர் மீது ஏறுவதற்கு முயற்சிக்கின்றது.
சட்டென்று சுயநினைவிற்கு வந்த அவர், பதறியடித்து உருண்டு எஸ்கேப் ஆகியுள்ளார். ஆனால் இந்த சம்பவத்திற்கு அருகில் மற்றொரு பாம்பும் இருக்கின்றது.
குறித்த காணொளியின் உண்மை தன்மை குறித்து பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இவை ரீல்ஸ்காக செய்யப்பட்டதா அல்லது நிஜத்தில் செய்யப்பட்டதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்
சிலர் விஷம் இல்லாத இரண்டு பாம்புகளை வயல் ஓரத்தில் கொண்டு வந்துவிட்டு வேண்டுமென்றே பாம்பை பார்த்ததுபோல் அவர்கள் ஆக்டிங் செய்திருக்கிறார்கள் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |