முட்டையில் இருந்து வெளிவரும் நாகப் பாம்பு குட்டிகள்... மெய்சிலிர்கும் வைரல் காட்சி!
நாகபாம்பு குட்டிகள் முட்டையில் இருந்து வெளிவரும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக கொடிய விஷம் கொண்ட பாம்புகளின் பட்டியலில் நாகப்பாம்புகள் முக்கிய இடம் வகிக்கின்றன. நாகப்பாம்பு என்றாவே பெரும்பாலானவர்களுக்கு ஒரு இனம் புரியாத பயம் இருக்கும்.
இவை மற்றவகை பாம்புகளை போன்றே 3 வயது ஆன பின்னர் இன சேர்க்கையில் ஈடுப்பட்டு முட்டையிடத் ஆரம்பிக்கின்றன.
இவை முட்டையிடும் காலத்தில் தனியான மிகவும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்கின்றன. தனது குட்டிகளுக்கு வேறு எந்த விலங்காலும் ஆபத்து வராத வகையில் இடத்தைத் தேர்வு செய்வதில் நாகங்கள் மிகவும் தேர்சிப்பெற்றது.
இந்த பாம்புகள் 16 முதல் 33 முட்டைகளை இடுகின்றன.நாகப்பாம்புகள் பிறக்கும்போது 8 முதல் 12 அங்குல நீளம் இருபதுடன் இவை பிறக்கும் போதே விஷம் கொண்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |