பரபரப்பை ஏற்படுத்திய நாகப்பாம்பு! பீதியில் பதறி ஓடிய மக்கள்... தீயாய் பரவும் அரிய காட்சி
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பது சொல்லாடல். அந்த சொல்லாடலை நிரூபிக்கும் வகையில் நிகழ்வு ஒன்று கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி கல்சன்கா சந்திப்பு எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக இருக்கும்.
இந்த நிலையில், அந்த சந்திப்பில் திடீரென நாகப்பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை கண்ட போக்குவரத்து போலீஸார், அந்த பாம்பின் பாதுகாப்பு கருதி போக்குவரத்தை உடனே நிறுத்தியுள்ளனர்.
A slithery visitor brought traffic to a standstill at the bustling Kalsanka junction in Karnataka's Udupi district for around 30 minutes during peak evening rush hours on Thursday. #Udupi #Karnataka pic.twitter.com/Q2Tp3BVI4Y
— TOI Mangaluru (@TOIMangalore) February 11, 2021
இந்த காட்சிகளை கண்ட பொதுமக்கள் வழக்கம் போல் அந்த பாம்பை வீடியோ எடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால், கடுமையான வெயில் சுட்டெரித்ததால் அந்த பாம்பால் வேகமாக அங்கிருந்து நகர முடியவில்லை.
இறுதியாக அந்த பாம்பு அந்த சந்திப்பை கடுமையான பாதிப்புகளுக்கிடையே கடந்து சென்றது. இதனால், அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த வீடியோவானது தற்போது வெளியாகியுள்ளது.