விஜய்–சங்கீதா 27வது திருமண நாள்: ரசிகர்களின் ஒரே ஆசை!
vijay -sangeetha wedding-anniversary : முதல்வர் விஜய் மற்றும் சங்கீதாவின் 27வது திருமண நாள் இன்று. இதையொட்டி தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருவதுடன், “அண்ணனையும் அண்ணியையும் மீண்டும் ஜோடியாக பார்க்க வேண்டும்” என்ற தங்களது ஆசையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
விஜய்–சங்கீதா திருமண நாளில் இருவரும் ஒன்றாக இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு
நேற்றிலிருந்தே கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் சில ரசிகர்கள், விஜய் பிறந்தநாளையொட்டி த்ரிஷா பகிர்ந்த கேக் புகைப்படத்தை எடிட் செய்து, அதில் சங்கீதா இருப்பது போன்ற படங்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
“எடிட் புகைப்படமாக இருந்தாலும், சங்கீதா அண்ணியை இப்படி மகிழ்ச்சியாக பார்க்கும்போது மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது” என ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய் அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய பிறகு, அவரை சங்கீதாவுடன் இணைந்து பார்க்க முடியாதது தங்களின் மிகப்பெரிய குறையாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, விஜய் -சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது குறித்து வெளியான தகவலுக்குப் பிறகு, இந்த திருமண நாளில் விஜய்யும் சங்கீதாவும் ஒன்றாக வெளியே வந்தால் அது தங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் என விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

மகன் ஜேசன் சஞ்சய் படம் ரிலீஸ்
இதற்கிடையே, விஜய்–சங்கீதா தம்பதியின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அவர் இயக்கிய ‘சிக்மா’ திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வெளியீட்டை கருத்தில் கொண்டு அக்டோபர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பேட்டிகளில் தனது அப்பா, அம்மா குறித்து பெருமையாக பேசும் ஜேசன், அதே நேரத்தில் தனது தங்கை திவ்யா சாஷாவுடன்தான் மிகவும் நெருக்கமாகவும், பல விஷயங்களையும் அவருடன் பகிர்ந்து கொள்வதாகவும் கூறியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், விஜய் - சங்கீதாவின் 27வது திருமண நாளான இன்று, பல்வேறு பேச்சுகளுக்கு மத்தியில் விஜய்–சங்கீதா இருவரும் மீண்டும் ஒன்றாக இருக்கும் ஒரு தருணத்தை பார்க்க வேண்டும் என்பதே தளபதி ரசிகர்களின் மிகப்பெரிய ஆசையாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |