மாற்றப்பட்ட முதல்வர் விஜய்யின் சொகுசு நாற்காலி! இதன் விலை என்ன?
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் அறையில் விஜய் அமரும் நாற்காலி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதன் விலை தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் விஜய்
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பல நடைமுறைகளில் மாற்றங்களை செய்து வரும் ஜோசப் விஜய், தலைமைச் செயலகத்தில் தனது அலுவலக அறையில் பயன்படுத்திய மர நாற்காலியை மாற்றியுள்ளார்.
முன்னதாக மர நாற்காலியில் அமர்ந்து பணியாற்றி வந்த விஜய், நீண்ட நேரம் அமர்வதால் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டதானால் அந்த நாற்காலி மாற்றபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, அவருக்காக அதிநவீன குஷன் வசதியுடன் கூடிய பிரீமியம் நாற்காலி அலுவலக அறையில் மாற்றப்பட்டுள்ளது. இதன் விலை தொடர்பில் பார்க்கலாம்.

நாற்காலி விலை
சுமார் ரூ.55,000 முதல் ரூ.80,000 வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது உயர்தர எர்கோனாமிக் (Ergonomic) வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட பிரீமியம் மாடல் என கூறப்படுகிறது.
இந்த நாற்காலி தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |