உங்க அப்பாவைக் காணோம் - முதல்வர் கூறிய குட்டி கதை (Video)
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் விஜய் குட்டிக் கதையுடன் பேசியுள்ளார்.
சட்டசபையில் விஜய் உரை
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றிய நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வருகின்றது.
இதுவரை தமிழக முதல்வர் வாய் திறக்கவில்லை என்று பலகையுடன் வந்து தனது எதிர்ப்பை காட்டிய திமுக-வினர் இன்று முதல்வர் பேச ஆரம்பித்ததும் வெளிநடப்பு செய்துள்ளனர்.
சட்டப்பேரவையில் முதல்வர் குட்டி கதை ஒன்றினை கூறியுள்ள நிலையில், இது பேச்சு பொருளாக மாறியுள்ளது.

குட்டி கதை என்ன?
முதல்வர் பேசுகையில், டாஸ்மார்க் கடைகளில் கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளையடித்த பணம் தற்போது கஜானாவிற்கு கொண்டு வரப்படுகின்றது என்றார்.
உடனே திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பினை காட்டியதுடன், அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பும் செய்தனர்.
பின்பு குட்டி கதை கூறுவதற்கு முதல்வர் சபாநாயகரிடம் அனுமதி கேட்ட நிலையில், சபாநாயகர் அனுமதி கொடுத்துள்ளார்.

ஒரு ஊரில் பெரியவர் ஒருவர் வெயில் அதிகமாக இருப்பதாக தெரிவித்து கண்ணில் கைவைத்து தேடிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த சிறுவன் ஒருவன், என்ன தேடுறீங்கள் என்று கேட்ட போது, பெரியவர் உங்க அப்பா இங்கதான் இருப்பாருனு சொன்னாங்க அவரைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன். உங்க அப்பாவைக் காணோம் என்று கூறி முடித்தார்.
மேலும் முதல்வர் பேசுகையில், எங்களுக்கும் நக்கல், நையாண்டியாக பேச தெரியும் என்றும் சம்பந்தமில்லாத குட்டி கதையை எங்களுக்கும் பேச தெரியும். கதையில் பெரியவர் அப்படி கூறினார். யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்.