அம்மாவுக்கு CM விஜய் கொடுத்த முதல் பரிசு - தாயிடம் அவர் கேட்ட சந்தேகம்தான் ஹைலைட்!
முன்னாள் நடிகராகவும், தற்போது தமிழகத்தின் முதல்வராகவும் திகழும் சி. ஜோசப் விஜய், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனதில் தனி இடம்பிடித்தவர்.
இன்று தனது 52 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் விஜய் குறித்த பல தகவல்கள் இணையத்தில் வலம் வருகின்றது.

அவற்றில் ஒன்று, அவரது தாயார் ஷோபா பகிர்ந்த ஒரு இனிமையான நினைவு. முன்னாள் பின்னணிப் பாடகியான ஷோபா, சமீபத்திய ஒரு நேர்காணலில் மகன் விஜயைப் பற்றிய பல அறியப்படாத விஷயங்களை பகிர்ந்திருந்தார். குறுத்த பேட்டி தற்போது இணையத்தில் மீண்டும் ரசிகர்களால் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
குறிப்பாக, விஜய் தனது தாயாருக்கு வாங்கிக் கொடுத்த முதல் பரிசு பற்றிய தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விஜய் அம்மா பகிர்ந்த விடயம்
‘வசந்த வாசல்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலத்தில், நண்பர் சஞ்சீவுடன் சேர்ந்து ஒரு துணிக்கடைக்கு சென்ற விஜய், தாயாருக்கு ஒரு புடவை வாங்க முடிவு செய்தாராம்.
ஆனால், புடவை வாங்கும் அனுபவம் இல்லாததால் அவர் தாயாரிடம் மிகவும் அப்பாவித்தனமான ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். “அம்மா... புடவைக்கு என்ன சைஸ்மா?” என்று விஜய் கேட்டதாக ஷோபா சிரித்துக்கொண்டே நினைவுகூர்ந்தார்.

அதற்கு, “புடவைக்கு சைஸ் எதுவும் கிடையாது பா...” என்று தான் விளக்கிக் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், தான் மடிசார் கட்டுவேன் என்பதால் அதற்கேற்ற அளவு இருக்குமோ என நினைத்து விஜய் அப்படி கேட்டிருக்கலாம் என்றும் ஷோபா நகைச்சுவையாக கூறியுள்ளார்.
விஜய்க்கு ஷாப்பிங் பிடிக்காது
மேலும், 1996ஆம் ஆண்டு மகன் வாங்கிக் கொடுத்த அந்த சேலையை இன்றுவரை பத்திரமாக பாதுகாத்து வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த தகவல் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், விஜயின் குணநலன்கள் பற்றியும் ஷோபா பகிர்ந்துள்ளார். சிறுவயதில் மிகவும் கலகலப்பாக இருந்த விஜய், தனது 10வது வயதில் தங்கை உயிரிழந்த பிறகு மிகவும் அமைதியானவராக மாறிவிட்டதாக அவர் கூறினார்.

அதேபோல், விஜய்க்கு ஷாப்பிங் செல்வதில் பெரிதாக விருப்பம் இல்லை என்றும், வெளிநாட்டு பயணங்களின் போது குடும்பத்தினர் அனைவரும் ஷாப்பிங் செல்லும்போது கூட, அவர் ஹோட்டலிலேயே தங்கி ஓய்வெடுப்பதை விரும்புவார் என்றும் ஷோபா தெரிவித்துள்ளார். குறித்த விடயங்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |