சிறுநீர் 'இந்த' மாதிரி இருக்கா? அப்போ ஆபத்து நிச்சயம்.. தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக உடலில் இருந்து வெளியேற்றும் கழிவுகளான சிறுநீர் மற்றும் மலம் நம்முடைய ஆரோக்கியத்தை வெளிப்படுத்துகிறது.
மனிதர்களின் சிறுநீரின் நிறம் தெளிவாக அல்லது மஞ்சள் நிறமாக இருக்க வேண்டும்.
சிறுநீர் மேகமூட்டத்துடன் காணப்பட்டால் தொற்று, சிறுநீரக கற்கள் அல்லது பிற உடல்நலக் கவலைகள் போன்ற பல காரணங்களாக இருக்கலாம்.
அந்த வகையில், மேகமூட்டமான சிறுநீருக்கான காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சை ஆகியற்றை தெரிவாக தெரிந்து கொள்வோம்.
மேகமூட்டமான சிறுநீர்
Image - Shutterstock
மேகமூட்டமான சிறுநீர் பல்வேறு காரணிகளால் ஏற்படும்.
அதாவது, சிறுநீர் பாதை தொற்று (UTI), நீரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
சிறுநீர் பாதை தொற்றின் அறிகுறிகள்
1. சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரியும் உணர்வு
2. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல்
3. சிறுநீர் கசிவு
4. கீழ் வயிற்றில் வலி
சிறுநீரக கற்கள் எப்படி தோன்றுகிறது தெரியுமா?
நம்முடைய சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகளால் உருவான பிறகு சிறுநீரகத்தில் குவிந்து படிகங்களை தான் சிறுநீரக கற்கள் என்கிறோம். சிறுநீர் கழிக்கும் போது பக்கவாட்டில் அல்லது கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தலாம்.
சிகிச்சையளிப்பது எப்படி?
1. தினமும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் ஏராளமான திரவங்களை வைப்பது மட்டுமல்லது சிறுநீரை அதன் இயல்பான நிறத்திற்கு திரும்ப உதவியாக இருக்கும்.
2. பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்க்களுக்கு தகுந்த ஆண்டிமைக்ரோபியல் சிகிச்சை தேவைப்படுகிறது.
3. வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளான மருத்துவ சிகிச்சைகளை தகுந்த நேரங்களில் அணுகுதல்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |