ஆடைகளின் லேபிள்களில் இருக்கும் இந்த சின்னங்களுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?
ஆடைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில சின்னங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை பார்க்கலாம்.
ஆடைகளில் இருக்கும் சின்னம்
ஒவ்வொரு ஆடையும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
இவற்றை துவைப்பதும் பராமரிப்பதும் மிகவும் அவசியம். Clothing care symbols இன் அர்த்தம் தெரிந்தால் பட்டு, பாலியஸ்டர், பருத்தி துணிகளை சரியான முறையில் துவைத்து, உலர்த்தி, அயர்ன் செய்து நீண்ட நாள் பராமரிக்கலாம்.
பொதுவாக நாம் வாங்கிய புது துணிகள் நிறம் மங்குவதற்கும் விரைவாக கிழிவதற்கும் காரணம் அந்த ஆடைகளில் இருக்கும் Clothing care symbols ஐ பின்பற்றாது தான். இவற்றை புறக்கணிக்காமல் பின்பற்ற வேண்டும்.
கை சின்னம் | நாம் வாங்கும் துணிகளில் கை சின்னம் இருந்தால் அவற்றை கையால் மட்டுமே துவைக்க வேண்டும் என்று அர்த்தம். பட்டு, சரிகை அல்லது எம்பிராய்டரி பொருட்கள் போன்ற கை வேலைபாடுகள் , எளிதில் கிழியக்கூடிய துணிகளால் செய்யப்பட்ட ஆடைகளுக்கு இது மிகவும் முக்கியமானது. மிகவும் முக்கியமாக இதை இயந்திரத்தில் துவைக்க கூடாது. |
வட்ட சின்னம் | துணிகளில் இருககும் வட்ட சின்னம் உலர் சுத்தம் என்பதை குறிப்பிடும். ஆனால் அதில் குறுக்காக கோடு போட்டு இருந்தால் அவை உலர் சுத்தம் செய்வதற்கு ஏற்றவை அல்ல என அர்த்தம். அவற்றை வேறு முறையில் சுத்தம் செய்ய வேண்டும். |
முறுக்கப்பட்ட துணி சின்னம் | இதுபோன்ற சின்னம் ஒரு துணியில் இருந்தால் அதை முறுக்க முடியும் என்று அர்த்தம். இருப்பினும், அதே சின்னத்தில் குறுக்கு குறி இருந்தால், அதை முறுக்க கூடாது என அர்த்தம். அதற்கு அதை அப்படியே அலசி காய வைக்க வேண்டும். |
வட்டம் உள்ளே இருக்கும் சதுரம் | துணிகளில் இந்த சின்னம் இருந்தால் துணிகளை டிரையரில் உலர்த்தலாம். இந்த சின்னத்தில் குறுக்குக் குறி இருந்தால், அவற்றை டிரையரில் உலர்த்த கூடாதாம். இந்த துணிகளை காற்றில் உலர்த்த வேண்டும் அல்லதுவெயிலில் காய வைக்க வேண்டும். |
ஐயன் பாக்ஸ் சின்னம் | துணிகளில் இருக்கும் இந்த அயர்ன் பாக்ஸ் சின்னம் வெப்பநிலை கட்டுப்பாட்டைக் குறிக்கிறது. இதை இந்த புள்ளிகள் வைத்து துணிகளுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை குறிக்கும். |
தொட்டி சின்னம் | இந்த சின்னம் ஆடைகளில் இருந்தால் சலவை இயந்திரம் பற்றிய வழிமுறைகளை வழங்குகிறது என அர்த்தம். தொட்டியின் உள்ளே 30°C அல்லது 40°C போன்ற எண்கள் இருந்தால், அந்த துணிகளை துவைக்க பயன்படுத்த வேண்டிய நீரின் அதிகபட்ச வெப்பநிலையை அவை குறிக்கும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்கள் துணிகள் சுருக்கமடையாது, மங்காது, மேலும் அவை புதியதாகவே இருக்கும். |