வைரஸ் தொற்றுகளுக்கு மருந்தாகும் Clevira மாத்திரைகள்
வைரஸ் கிருமித்தொற்றால் உண்டாகும் சளி மற்றும் காய்ச்சலுக்கு மருந்தாகிறது Clevira மாத்திரைகள்.
உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதால் தொற்றுகளின் தீவிரத்தை குறைக்கிறது.
ஆயுர்வேத தயாரிப்பாக உருவாகும் Clevira மாத்திரைகள் கோவிட் தொற்றின் ஆரம்பகால அறிகுறிகளுக்கு மருந்தானது என கூறப்பட்டது.
இதில் ஆன்டிவைரஸ், ஆன்டி பக்டீரியா, நோய் எதிர்ப்பு அழற்சி பண்புகள் நிறைந்துள்ளன.
சளி, காய்ச்சல் தவிர துர்நாற்றம், உடல் பலவீனம் போன்றவற்றிற்கும் மருந்தாகிறது.
மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கீமோதெரபி சிகிச்சையின் போது வலியை குறைக்கவும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
எந்தவொரு மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக எடுத்துக் கொள்வது ஆபத்தானது.
எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி Clevira மாத்திரைகளை பயன்படுத்தலாம். மருத்துவர் கூறும் அளவுகளில், குறிப்பிடும் நாட்களுக்கு மட்டும் பயன்படுத்தவும்.
எதற்காகவும் மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுக்க வேண்டாம், பயன்படுத்தும் முன்னர் அதில் குறிப்பிட்டுள்ளவற்றை கவனத்தில் எடுக்கவும்.
இதனால் பக்கவிளைவுகள் குறைவு என்றாலும், சிலருக்கு வயிற்றில் அசௌகரியம், புண், வாந்தி உண்டாகலாம்.
பக்கவிளைவுகள் தீவிரமானாலும், வேறு ஏதேனும் தொந்தரவுகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |