கொரோனாவை குணப்படுத்தும் மாத்திரை! விலை எவ்வளவு தெரியுமா? யாரெல்லாம் சாப்பிடலாம்?
கொரோனா தொற்றால் மக்கள் இறப்பதற்கு ஏற்கனவே இருக்கும் ஆரோக்கிய பிரச்சனைகள் மட்டுமின்றி, தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தி உடலில் குறைவாக இருப்பதும் ஓர் முக்கிய காரணம்.
எனவே இந்த பெருந்தொற்று காலத்தில் ஒருவர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் கொரோனாவைத் தடுக்க முடியும்.
கசாயங்கள்
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவை உள்ளன.
அத்துடன் தற்போது மூலிகைகளைக் கொண்டு தயாரித்த க்ளெவிரா என்ற ஆயுர்வேத மாத்திரை மற்றும் சிரப் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சென்னையைச் சேர்ந்த மருந்து நிறுவனமான அபெக்ஸ் லேபரட்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது.
க்ளெவிரா மருந்து எதைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது?
ஆயுர்வேத மருந்தான க்ளெவிரா நிலவேம்பு, பப்பாளி இலை, கோரைக்கிழங்கு, காட்டுவேம்பு, இஞ்சி, மிளகு, காட்டுப் பேய் புடல், சீந்தில் கொடி, பற்படாகம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
இந்த மருந்தை லேசான மற்றும் மிதமான கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்கள் எடுத்து வருவதன் மூலம் முற்றிலும் குணமடையலாம் என்று ஆய்வுகளில் தெரிந்து வந்துள்ளதாக இந்த அபெக்ஸ் மருந்து நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆய்வு
க்ளெவிரா மருந்து முதல் கட்டமாக ஆய்வகம் மற்றும் எலிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் சிறப்பான முடிவு வந்ததால், இந்த மருந்தை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 100 கொரோனா நோயாளிகளுக்கு 14 நாட்களுக்கு கொடுத்து சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனையில் க்ளெவிரா மருந்து கொடுக்கப்பட்டு வந்த கொரோனா நோயாளிகளுக்கு 5 நாட்களில் 86 சதவீத தொற்றும், 10 நாட்களில் 100 சதவீத தொற்றும் குணமாகியிருப்பது தெரிய வந்தது.
இதனால் இந்த க்ளெவிரா மருந்து மற்றும் இதுக்குறித்து மேற்கொண்ட ஆய்வின் முடிவை ஆயுஷ் அமைச்சகத்திற்கு அந்நிறுவத்தினர் அனுப்பினர். தற்போது இந்த க்ளெவிரா மருந்துக்கு ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மருந்து எவ்வாறு செயல்படுகிறது?
அப்பெக்ஸ் ஆய்வகங்களின் சர்வதேச வணிக மேலாளர் சி ஆர்தர் பால் இந்த மருந்தின் செயல்பாடு குறித்து கூறுகையில், "இந்த ஆன்டி-வைரல் மருந்து உடலில் உள்ள வைரஸ்களின் அளவைக் குறைப்பதைத் தவிர்த்து, இரத்த வெள்ளையணுக்கள், பிளேட்லெட் மற்றும் லிம்போசைட்டுகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கிறது. எனவே இது அனைத்து அறிகுறிகளில் இருந்து விரைவில் மீளச் செய்கிறது." என்று கூறினார்.
எப்போது சாப்பிட வேண்டும்?
க்ளெவிரா மாத்திரையை ஒருவர் காலை மற்றும் இரவு உணவிற்கு பின் சாப்பிட வேண்டும். அதேப்போல், க்ளெவிரா சிரப்பை காலை, மாலை என இருவேளையும் 10 மிலி பருக வேண்டும். இந்த மாத்திரை மற்றும் சிரப்பால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் சாப்பிடலாம்?
க்ளெவிரா மாத்திரை மற்றும் சிரப்பை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மட்டுமின்றி, கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க நினைப்போரும் சாப்பிடலாம். அவர்களும் இந்த மருந்தை தினமும் காலை மற்றும் இரவு என இரண்டு வேளை உணவுக்கு பின் எடுக்க வேண்டும். மேலும் இந்த மருந்து 2 வயது முதல் அனைத்து வயதினருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.