வனப்பகுதியில் விடப்பட்ட அரிகொம்பன் யானையின் அறிவைப் பாருங்க! மெய்சிலிர்க்க வைத்த காட்சி
தமிழகத்தில் கம்பம் பகுதியை கதிகலங்க வைத்த அரி கொம்பன் யானை தற்போது வேறு இடத்தில் எவ்வாறு உள்ளது என்ற காணொளி இணையத்தில் கடும் வைரலாகி வருகின்றது.
தேனியை புரட்டிப்போட்ட அரிகொம்பன்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கம்பீரமாக காட்டு யானை ஒன்று உலா வந்துள்ளது. இந்த யானை அரி கொம்பன் என்று மக்கள் அழைத்தனர்.
இந்த யானை தமிழ்நாட்டில் கம்பம் பகுதியில் நுழைந்து ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டிருந்த அரிசியை வேட்டையாடியது. இதனால் தமிழக மக்கள் இந்த யானையை அரிசி கொம்பன் என்று பெயர் வைத்து அழைத்தனர்.
மக்கள் கூட்டத்தினை பார்த்து கடுமையாக நடந்து கொண்ட இந்த யானை சுமார் 8 நாட்களாக மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியது.
தேனி மாவட்டம் கம்பம் வனப்பகுதியில் சண்முக நாக அணைப்பகுதியில் சின்ன ஓவலாபுரம் பகுதியில் பிடிப்பட்ட அரிசி கொம்பன் யானை சாலை மார்க்கமாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்கு நேற்று மாலை 6 மணி அளவில் வந்தடைந்துள்ளது.
இதன் தும்பிக்கையில் காயம் ஏற்பட்டதையடுத்து இதற்கு சிகிச்சை அளித்து விட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
பின்பு அரி கொம்பன் யானை நள்ளிரவில் முத்துக்குழி வனப்பகுதியில் நள்ளிரவில் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து யானை கண்காணிப்பில் இருந்து வருகின்றது.
இந்நிலையில் அரிகொம்பன் இயற்கை எழில் கொஞ்சும் மிக அமைதியான இடத்தில் ஆற்றின் ஓரம் அழகாக சாப்பிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த யானை தான் சாப்பிடுவதற்கு புல்லை எடுத்து அதனை தண்ணீரில் நன்கு கழுவிவிட்டு, பின்பு அதனை நன்றாக தண்ணீரை உதறிவிட்டு சாப்பிடும் அழகு தற்போது வெளியாகியுள்ளது.
இதனை அவதானித்த மக்கள் இந்த அமைதியான இடத்தில் அரிகொம்பன் நன்றாக இருக்க வேண்டும் மக்கள் பிரார்த்திப்பதாக கூறி வருகின்றனர். இக்காட்சியை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
Cleans the grass well in tranquil waters before eating. Looks like soaking in the calm and beauty of his new home which we pray should be forever. Time will tell #Arikomban #TNForest #elephants pic.twitter.com/eU3Avk9jjo
— Supriya Sahu IAS (@supriyasahuias) June 7, 2023