படித்தது சிவில் இன்ஜினியரிங்! ஆனால் செருப்பு தைக்கும் வேலை: காரணம் என்ன?
இன்ஜினியரிங் படித்து முடித்த இளைஞர் ஒருவர் காலணி தைக்கும் தொழில் செய்து வரும் நிகழ்வு சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.
பொறியியல் பட்டதாரி
சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி என்று வரும்போது, நம் மனதில் முதலில் வருவது, ஆடம்பரமான மற்றும் வசதியான வாழ்க்கை முறையுடன் கூடிய அழகான சம்பளம் என்று தான் தோன்றும்.
ஆனால் இங்கு ஒரு பொறியியல் பட்டதாரி தன்னுடைய வாழ்க்கைக்காக காலணிகளை தைத்து வருகிறார் என்பதை உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் இளைஞர் ஒருவர் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு செருப்பு தைக்கும் வேலையை செய்து வருகின்றார்.
செருப்பு தைக்கும் தொழில்
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் ஒரு சிவில் இன்ஜினியரிங் பட்டதாரி. தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக காலணிகள் தைத்து வருகிறார்.
மாதம் ரூ. 4000-5000 என்ற சொற்ப சம்பளத்தில் வேலை கிடைத்ததால் இந்த வேலை செய்து வருவதாகவும், அப்போதைய சம்பளம் தனக்கு போதவில்லை என்பதால் இந்த வேலையை செய்து வருகின்றாராம்.
தமிழக அரசு தனக்கு அரசு வேலை வழங்கினால் பெரிய உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ள இவருக்கு, சமூகவலைத்தளங்களில் ஆதரவு கிடைத்து வருகின்றது.