சுனாமி அலைக்குள் மூழ்கிப் போன அழகிய நகரம்- வரலாற்றுத் தகவல்
இயற்கை பேரழிவுகளால் கடலுக்குள் மூழ்கிப்போன 5 நகரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆழ்கடலில் எண்ணற்ற அதிசயங்களும் விடை தெரியா மர்மங்களும் புதைந்து கிடக்கின்றன, அவற்றில் ஒன்று தான் இயற்கை பேரழிவுகளால் மூழ்கிப்போன பண்டைய கால நகரங்கள். அதைப்பற்றி பார்க்கலாம்.
Baia
பண்டைய கால ரோமானிய நகரமான Baia ஆடம்பரமான அரண்மனைகளுக்கு பெயர் பெற்றது, ரோமானிய மன்னர்களின் விருப்பமான நகரமும் இதுதான். போர்த்துகீசியம் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் "Baia" என்பதற்கு "விரிகுடா" என பொருள். தொடர்ச்சியான எரிமலை வெடிப்பு மற்றும் இயற்கையின் சீற்றத்தால் கடலுக்குள் மூழ்கிப்போனது, இந்நகரத்தின் எச்சங்களை காண சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் பலரும் ஸ்கூபா டைவிங் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Thonis-Heraklion
வர்த்தகத்துக்கு பெயர் பெற்ற எகிப்திய நகரமே Thonis-Heraklion. கோவிலை மையமாக கொண்டு கட்டப்பட்ட இந்நகரம் நைல் டெல்டா பகுதியில் அமையப்பெற்றது, இங்கு பல துறைமுகங்கள் இருந்தன. இதன்பின்னர் கோபுர வீடுகள், படகுகள், பாலங்கள் என இணைக்கப்பட்டது. காலப்போக்கில் நதியின் திசை மாறியதால் மண் அரிப்பின் காரணமாக நகரம் தண்ணீரில் மூழ்கியது.
Derwent
இயற்கை பேரழிவுகளால் அல்லாமல் வேண்டுமென்ற மூழ்கடிக்கப்பட்ட நகரமே Derwent. அதிகரித்து வரும் நகரங்களின் எண்ணிக்கை காரணமாக 1940களில் Derwent நீர்த்தேக்கத்தை அமைப்பதற்காக மூழ்கடிக்கப்பட்டது. நீர்த்தேக்கத்தின் கட்டுமான பணியின் போது அஷாப்டன் கிராமம் , டெர்வென்ட் உட்லேண்ட்ஸ் தேவாலயம் மற்றும் டெர்வென்ட் ஹால் ஆகியவையும் மூழ்கின. நீர்த்தேக்கத்தின் அளவு குறையும் போது கிராமத்தின் எஞ்சிய பாகங்கள் வெளியே தெரியும்.
Villa Epecuen
சுத்தமான தண்ணீருக்கு பெயர் பெற்ற Villa Epecuen அர்ஜென்டினாவில் உள்ளது. 1920ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட இந் நகரம் அழகான வடிவமைப்பால் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. 1985ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக முழு நகரமும் 10 மீற்றர் ஆழமான நீரில் மூழ்கியது, தொடர்ந்து நகரமும் வசிக்க தகுதியற்றதாக மாறிப்போனது. 2009ம் ஆண்டு 25 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் வற்றிய போது அதன் எச்சங்கள் வெளியே தெரிந்தன.
Port Royal 17
ஆம் நூற்றாண்டில், கடற்கொள்ளையர்களுக்கும் கறுப்பின வணிகங்களுக்கும் பெயர் பெற்றது Port Royal. 1692 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுத்தால் சுனாமி அலைகள் எழ நகரமே கடலுக்குள் மூழ்கியது. இதன் எச்சங்களை கொண்டு 17ம் நூற்றாண்டின் காலனித்துவ வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் வரலாறு, தொல்பொருள் தளங்கள் மற்றும் கடற்கொள்ளையர்களின் கடந்த கால எச்சங்கள் ஆகியவற்றால் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.