இலவங்கப்பட்டை நல்லது மட்டுமே கொடுக்கும்னு நினைச்சீங்களா? இவ்ளோ பக்கவிளைவு இருக்கு?
உடலுக்கு நல்லது என்று ஒரு பொருள் குறித்து சொல்லிவிட்டால் அதை அதிகமாக எடுத்துகொள்ளும் பலக்கும் நம்மில் பலருக்கு உண்டு. பிறகு அது பக்கவிளைவில் கொண்டு விடும். அப்படியான பொருளில் ஒன்றூ இலவங்கப்பட்டை. இது குறித்து தான் பார்க்க போகிறோம். இதை மிதமான அளவில் சாப்பிடுவது பாதுகாப்பானது.
அதிகமாக சாப்பிடுவதால் உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். ஏனெனில் இதில் கூமரின் என்னும் கலவை அதிகமாக உள்ளது. இது உடலில் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் ஒரு கலவை என்று ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இலவங்கப்பட்டையை அதிகமாக எடுத்துகொள்ளும் போது அதன் தயாரிப்புகளை சாப்பிடுவதாலும் வாய்ப்புண்களை எதிர்கொள்ளும் அபாயம் உண்டு. இதில் சின்ன்மால்டிஹைட் என்னும் கலவை பெரிய அளவில் எடுத்துகொள்ளும் போது அது ஒவ்வாமை எதிர்வினையை உண்டாக்கிவிடும்.
சிறிதளவு இலவங்கப்பட்டை இரத்தசர்க்கரை அளவை குறைக்க உதவும். ஆனால் அதிகமாக சாப்பிடுவதால் இது சர்க்கரை அளவை குறைத்துவிட செய்யும். இதனால் சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் மயக்க நிலை உண்டாகலாம். இலவங்கப்பட்டையை அதிகமாக எடுத்துகொள்ளும் போது அது சுவாசப்பிரச்சனையை உண்டாக்க வாய்ப்புண்டு.
இலவங்கப்பட்டை சினமால்டிஹைட் தொண்டைக்கு எரிச்சலூட்டும். இது சுவாச சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். மருந்துகளுடன் விளைவை உண்டாக்கலாம் இலவங்கப்பட்டை சிறிய அளவு முதல் மிதமானது வரை சாப்பிடுவது பாதுகாப்பானது. அதே நேரம் நீரிழிவு, கல்லீரல் பிரச்சனை, இதய நோய் போன்றவற்றுக்கு மருந்து எடுத்துகொள்பவர்களுக்கு இது அபாயத்தை உண்டாக்கலாம்.
அந்த மருந்துகளுடன் அதன் செயல்பாட்டுடன் இந்த இலவங்கப்பட்டை இணையலாம். அதன் விளைவுகளை அதிகரிக்க செய்யும். கூமரின் என்பது கல்லீரல் நச்சுத்தன்மையோடு சேதத்தையும் உண்டாக்க செய்யும். கல்லீரல் பாதிப்பை உண்டாக்க கூடிய மருந்துகளோடு இலவங்கப்பட்டையும் சேரும் போது அது கல்லீரல் பாதிப்பை உண்டாக்கிவிட செய்யும்.
நீரிழிவுக்கு மருந்து எடுத்துகொள்ளும் போது உடன் இலவங்கப்பட்டையும் சேர்ந்தால் அது இரத்த சர்க்கரை அளவை மேலும் குறைவாக்கி விடும்.
இது மருந்துகளின் விளைவுகளை மேம்படுத்தலாம் அல்லது அவற்றின் பக்கவிளைவுகளை அதிகரிக்க செய்யலாம். இலவங்கப்பட்டை எடுத்துகொள்ளும் போது கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது.