சீரியலிலிருந்து திடீரென நீக்கப்பட்ட பிக்பாஸ் தாமரை... நடந்தது என்ன?
பிக்பாஸ் தாமரை தான் நடித்துக் கொண்டிருந்த சீரியலிலிருந்து தன்னை நீக்கியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
பிக் பாஸ் தாமரை
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமான தாமரை செல்வி தற்போது சீரியல் மற்றும் படங்களில் நடித்து வருகின்றார்.
இவர் பிரபல ரிவியில் சின்ன மருமகள் என்ற தொடரில் கதாநாயகிக்கு அம்மாவாக நடித்திருந்தார். இந்நிலையில் தாமரையை திடீரென நீக்கிவிட்டு வேறொருவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதற்கு தாமரை செல்வி கொடுத்துள்ள விளக்கம் தற்போது வைரலாகி வருகின்றது. நடன கலைஞரான தாமரை செல்விக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது பிக் பாஸ் மேடை என்று கூறியு்ளளார்.

நீக்கப்பட்டது ஏன்?
சின்ன மருமகள் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்த போது மகிழ்ச்சியாக இருந்தது என்றும், சினிமா வாய்ப்பு மற்றும் இதர நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் ஏற்பட்ட ஒருநாள் கால்ஷீட் குளறுபடியால் தன்னை தொடரிலிருந்து நீக்கியுள்ளதாக கூறியுள்ளார்.
ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பிற்கு வரமுடியாத காரணத்திற்காக தன்னை சீரியலிலிருந்து நீக்கிவிட்டதாகவும், தனது வருத்தத்தை மறந்து முழுமையாக திரைப்பயணத்தில் கவனம் செலுத்தப்போவதாக கூறியுள்ளார்.

மேலும் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக நம்பிக்கையுடன் தெரிவித்தார். இதே போன்று கில்லாடி ஜோடிக்கும் தன்னை அழைத்தார்கள்... காடு, மலை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை வருகின்றேன் என்று கூறினேன்...
பின்பு போன் செய்து அடுத்த முறை பார்ப்போம் என்று கூறிவிட்டார்கள் என்று அந்த வருத்தத்தையும் பிக்பாஸ் தாமரை கூறியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |