“Dancing Rose – ஆக மாறிய ஸ்ருதிஹாசன்….” சூட்டை கிளப்பும் வைரல் வீடியோ !
இசையமைப்பாளராக, நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து, தற்போது விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் பாக்ஸிங் செய்யும் வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “DANCING ROSE” பாதிப்பா என்று கமெண்ட் வந்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.