‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பாக்ஸிங் ஸ்டைலிலில் டான்ஸ் - மாஸ் காட்டிய ‘சார்பட்டா’ டான்சிங் ரோஸ்
இயக்குநர், பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி வெளியானது.
இந்தப் படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமாத்துறையினர் அனைவரும் இப்படத்தை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
இப்படத்தில் ‘டான்சிங் ரோஸ்’ கதாபாத்திரத்தில் நடித்த ஷபீருக்கு திடீர் ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். உடல் மொழியாலேயே நடிப்பில் மிரட்டியிருக்கிறார் இவர்.
இந்நிலையில், ஹிட் அடித்த ‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு டான்சிங் ரோஸ் ஷபீர் உற்சாகமுடன் அவரது பாக்ஸிங் ஸ்டைலிலேயே நடனமாகி அசத்தியுள்ளார்.
இவர் ஆடின இந்த வீடியோவை அமேசான் பிரைம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
dancing rose dancing on vaathi coming in the boxing ring, is a correct way to win the match ??? pic.twitter.com/ZtlIDfddpg
— amazon prime video IN (@PrimeVideoIN) August 16, 2021