அறுவை சிகிச்சைக்குப்பின் ஜிம்மில் சிரஞ்சீவியுடன் பிரகாஷ் ராஜ் : புகைப்படம் வைரல்
சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிரகாஷ் ராஜ் உடல்நலம் தேறி, நடிகர் சிரஞ்சீவியுடன் ஜிம்மில் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. சமீபத்தில் வீட்டில் இருக்கும்போது நடிகர் பிரகாஷ் ராஜ் திடீரென சறுக்கி விழுந்தார். இதில் அவருக்கு இடது கையின் தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஹைதராபாத் அழைத்து சென்றனர்.
ஹைதராபாத் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்தது. இதை தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது’ என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அறுவை சிகைச்சைக்குப் பின் உடல்நலம் தேறிய பிரகாஷ்ராஜ், இன்று அதிகாலையில் ஜிம்மில் உடற்பயிற்சிக்காக அறுவை சிகிச்சை செய்த கைகளில் கட்டோடு சென்றுள்ளார்.
அப்போது, அங்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியும் உடற்பயிற்சிகாக வந்துள்ளார். இதனால் இவரும் ஜிம்மில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படத்தை பிரகாஷ்ராஜ் உற்சாகமுடன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
