“நானும் இந்த மாதிரி பண்ணிருக்கேன்... தைரியமாக இருங்க...” நடிகை யாஷிகாவுக்கு ஆறுதல் கூறிய பிரபல நடிகர்!
நடிகை யாஷிகா சமீபத்தில் ஓட்டி வந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யாஷிகா ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். தற்போது, சிகிச்சை பெற்று வரும் யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை வெளியிட்டார்.
நடிகை யாஷிகா ஆனந்த் இந்த பதிவுகளுக்கு பலர் நெகட்டிவ் கருத்துகளை அளித்து வந்தாலும், ஒரு சிலர் யாஷிகாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை யாஷிகாவிற்கு ஆறுதலாக சில வார்த்தைகள் கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், அன்புள்ள யாஷிகா, நீங்கள் இந்த நேரத்தில் தான் மிகவும் தைரியமாகவும் பாசிடிவாகவும் இருக்க வேண்டும். நீங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருவீர்கள். நானும் இந்த மாதிரி சூழ்நிலையில் இருந்துள்ளேன்.
அது எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன். மிக விரைவாக நீங்கள் குணமடைந்து பழைய நிலைக்கு திரும்புவீர்கள் என்று வாழ்த்துகிறேன் என பதிவிட்டிருந்தார்.
இதைப் பார்த்த யாஷிகாவும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். தற்போது இந்த டுவிட்டர் பதிவுகள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

