காமெடி நடிகர் கவுண்டமணியை நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் - புகைப்படம் வைரல்
தமிழ் திரையுலகில் தன்னுடைய காமெடி திறமையால் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் கவுண்டமணி. இவருக்கென்று இன்னும் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இவர் நடிப்பில் கடைசியாக 2016ம் ஆண்டு வெளியான ‘வாய்மை’ எனும் படத்தில் தான் கடைசியாக நடித்தார். அதற்கு பிறகு இவர் படங்களில் நடிக்கவில்லை.
இந்நிலையில், நடிகர் கவுண்டமணியை நேரில் சென்று சந்தித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
கவுண்டமணியை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன் சிறிது நேரம் பேசி மகிழ்ந்தார். பின்னர் கவுண்டமணியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
With the legend #GoundamaniSir
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 23, 2021
A great moment with lots of fun and a day to be remembered ?❤️ pic.twitter.com/CqpVrEiew3