சூப்பர் சிங்கர் நடுவரை கடுமையாக திட்டித் தீர்த்த ரசிகர் - ஒரே வரியில் பேசி முடித்த பென்னி தயாள்!
கடந்த சில வாரத்திற்கு முன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் எலிமினேட் செய்யப்பட்டார்.
இவரது எலிமினேஷனுக்கு பிறகு இணையதளத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. நன்றாக பாடி வந்த ஸ்ரீதர் சேனாவை ஏன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினீர்கள் என்றும் ரசிகர்கள் பலர் கேட்க தொடங்கினார்கள்.
மேலும், பென்னி தயாளின் தவறான தீர்ப்பு தான், ஸ்ரீதர் சேனா வெளியேற்றப்பட்டதற்கு காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டினர். இதனால், நடுவர் பென்னி தயாள், சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறேன் என்றும், இனி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டேன் என்று அதிரடியாக தெரிவித்து வெளியேறினார்.
சமீபத்தில் ஓணம் பண்டிகையை குறித்து ஒரு பதிவு ஒன்றை டுவிட்டரில் பென்னி தயாள் வெளியிட்டார்.
ஆனால், ரசிகர் ஒருவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட் செய்தார். அந்த ரசிகரின் பதிவில், "ஏற்கெனவே எலிமினேஷன் யார் என்று தேர்வு செய்துவிட்டீர்கள். அதே போல் சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சியின் வின்னர் யார் என்பதையும் தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ரொம்ப கூலாக பென்னி தயால், ஹாப்பி ஓணம் என்று பதிவிட்டு ரிப்ளை செய்தார்.
