‘வலையோசை கலகலவென’ பாடல் ஸ்டைலில் நயன்தாரா, சமந்தாவை ரொமான்ஸ் பண்ணும் விஜய்சேதுபதி
வலையோசை கலகலகலகலவென பாடல் ஸ்டைலில் விஜய் சேதுபதி, நயன்தரா மற்றும் சமந்தா இடம் பெற்ற படப்பிடிப்புக் காட்சிகள் தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற படம் படப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாண்டிசேரியில் நடந்து வருகிறது. தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் காட்சியில் சத்யா படத்தில் கமல் மற்றும் அமலா இருவரும் வலையோசை கலகலகலகலவென பாடலில் பேருந்தில் படியில் தொங்கிக் கொண்டே ரொமான்ஸ் செய்வார்கள்.
அதுபோல இந்தக் காட்சியில் விஜய் சேதுபதி, நயன்தரா மற்றும் சமந்தா மூவரும் பேருந்தின் படியில் தொங்கிக் கொண்டு செல்லும் காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ -
#KaathuVaakulaRenduKaadhal #Nayanthara#Samantha@NayantharaU @nayantharaa @VigneshShivN @VijaySethuOffl @ikamalhaasan @Samanthaprabhu2 ???? pic.twitter.com/PJK8EuNVzc
— Anso MiCk M? (@ansoMichael1) August 23, 2021