மைனா நந்தினியின் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்தி சர்ப்ரைஸ் கொடுத்த கணவர் யோகேஷ்!
விஜய் டிவியில் வெளியான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர்தான் நடிகை மைனா. சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனாவிற்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தன.
இதனையடுத்து, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களிலும் நடிகை மைனா நடித்திருக்கிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr. And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவர் யோகேஷுடன் கலந்து கொண்டு பங்கேற்று வருகிறார்.
இதில் சென்ற வாரம், தொடர்ந்து நடக்கும் போட்டிகளில் வெற்றி பெறும் கணவர்கள், தங்களது மனைவிகளுக்கு பரிசு கொடுக்க வேண்டும். அப்போது, தனது மனைவி மைனாவிற்கு சப்ரைஸ் கொடுக்கும் விதமாக, மைனாவின் உருவத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தி, இன்ப அதிர்ச்சி கொடுத்தார் யோகேஷ்.
தற்போது, அந்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நடிகை மைனா நந்தினி வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..