‘ராஜா ராணி’ ஆல்யா மானசா... எவ்ளோ படிச்சிருக்காங்க தெரியுமா?
தனது படிப்பு குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு சீரியல் நடிகை ஆல்யா மானசா சமூக வலைதளங்களில் பதில் அளித்துள்ளார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியாவாக நடித்து வருபவர்தான் ஆல்யா மானசா.
இவர் அடிப்படையில் ஒரு டான்சர். ஆல்யா, ராஜா ராணி முதல் பாகத்தில் நடிகையாக அறிமுகமானார். செம்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அவர், தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இந்நிலையில், ஆல்யா, “போரடிக்குது, ஏதாவது கேள்வி கேளுங்கள். சிறந்த 10 கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும்’ என இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை போட்டார். அப்போது ரசிகர் ஒருவர், ‘நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த ஆல்யா, “நான் 12-ம் வகுப்பு வரைதான் படித்தேன். பின்னர் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டேன்’ என்று கூறியுள்ளார்.
