தர்பார் ரஜினியையே மிஞ்சிய நடிகர் விஜய்... தளபதி 66 படத்திற்கு விஜய்க்கு எவ்வளவு எத்தனை கோடி தெரியுமா?
கோலமாவு கோகிலா, டாக்டர், ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தற்போது நடிகர் விஜய் 'தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இப்படத்தில் நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டத்தை முடிப்பதற்கு படக்குழு ரஷ்யா புறப்பட உள்ளது. தற்போது, இந்த படத்திற்காக விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
'மாஸ்டர்' படத்துக்கு ரூ. 75 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய விஜய் பைலிங்குவல் படம் என்பதால் தமிழுக்கு ரூ.80 கோடி, தெலுங்கு மார்க்கெட்டிக்கு ரூ.40 கோடி என மொத்தம் 120 கோடி ரூபாய் சம்பளத்துக்கு இந்தப் படத்தில் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
தர்பார் படத்திற்காக ரஜினிகாந்த் கடைசியாக வாங்கிய சம்பளம் ரூ. 108 கோடியாம். தற்போது அதை விடவும் அதிகமாக நடிகர் விஜய் சம்பளம் வாங்கி இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
