ஆதரவற்றவர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரபல நடிகை! குவியும் பாராட்டு
நடிகை நிதி அகர்வால் தனது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடிய புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜெயம் ரவியின் ‘பூமி’, சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர்தான் நடிகை நிதி அகர்வால். இவர் தற்போது, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். நேற்று ஆகஸ்ட் 17ம் தேதி நிதி அகர்வாலின் 28வது பிறந்தநாள்.
இதனையடுத்து, நடிகை நிதி அகர்வால் ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்று, ஆதரவற்ற முதியோர்களுடன் உற்சாகமுடன் கைக்குலுக்கி பேசி மகிழ்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
அதோடு, அங்குள்ள முதியோர்களுக்கும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கும் தானே உணவு பரிமாறி மகிழ்ச்சி அளித்தார். ஆதவற்றவர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய நிதி அகர்வாலின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இவரது செயலுக்கு நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

