எப்போ திருமணம்? காதலை உறுதி செய்தார்களா சித்தார்த்- அதிதி ராவ்
நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதரிவும் ஒரே வீட்டிலிருந்து குத்தாட்டம் போட்ட வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கரின் 'பாய்ஸ்' திரைப்படம் நடித்து சாக்லேட் பாயாக அறிமுகமானவர் தான் நடிகர் சித்தார்த்.
இதனை தொடர்ந்து இவர் தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.
பிரபல நடிகையுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட நடிகர்
இந்த நிலையில், சமீபக் காலமாக நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதரிவும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகிய நிலையில் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகின.
இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைராகி வந்த நிலையில், இருவரும் சேர்ந்து, “மால டம் டம்” என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்கள்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள், “ இவர்கள் இருவரும் லிவிங்கில் இருக்கிறார்களா? என சந்தேகிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.